பாலாவை எட்டி உதைத்த சனம்.. தகாத வார்த்தைகளால் வாக்குவாதம்.. போர்க்களமான பிக்பாஸ் வீடு.. பகீர் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜி முருகதாஸை சனம் ஷெட்டி எட்டி உதைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியமும் விறுவிறுப்பும் கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறுவது காட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோ பார்க்கும் போதே பகீர் கிளப்பியுள்ளது.

வேக வேகமாக கதவை திறந்து

வேக வேகமாக கதவை திறந்து

அதாவது அந்த புரமோவில் சனம் ஷெட்டிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. வேக வேகமாக கதவை திறந்துக் கொண்டு செல்லும் பாலாஜி, ஏய் என்னா விட்டா பேசிக்கிட்ட போற என சனம் ஷெட்டியை நெருங்கி கத்துகிறார்.

உங்களுக்கு அறிவில்ல?

உங்களுக்கு அறிவில்ல?

அப்போது ஏன் வார்த்தையை விடுறீங்க.. அறிவில்ல அறிவில்ல என மீண்டும் மீண்டும் கேட்கும் சனம் என்ன வார்த்தை விடணும்னு அறிவில்ல என கேட்கிறார். அதற்கு கொஞ்சமாவது மேனர்ஸோட நடந்துக்கோ என்கிறார் பாலாஜி.

ஏன் என்கிட்ட பேசுன?

ஏன் என்கிட்ட பேசுன?

அதற்கு உங்கக்கிட்ட மேனர்ஸ் காட்டணும்னு அவசியம் இல்லை போப்பா என்று கூறிவிட்டு செல்கிறார் சனம். அதற்கு அவரை அடிப்பது போல செல்லும் பாலாஜி, நேத்து நைட்டு ஏன் என்கிட்ட வந்த? எதுக்கு பேசுன என்கிட்ட என ஆக்ரோஷமாக கேட்கிறார் பாலாஜி.

யார் என்னை உதைத்தது?

யார் என்னை உதைத்தது?

அதற்கு, நான் பேசலயே என்ற சனம், பின்னர் பேச மாட்டேன் என்று சொன்னேன் என்கிறார். அப்போது, நேற்று இரவு யார் என்னிடம் பேசினது? யார் என்னை பின்னால் உதைத்தது? என திருப்பி திருப்பி அதையே ஆவேசமாக கேட்கிறார் பாலா.

உதைச்சு முடிச்சுட்டு போ

உதைச்சு முடிச்சுட்டு போ

அப்போது தனது பேக்கை காட்டும் சனம் ஷெட்டி, இந்தா உதைச்சு முடிச்சுட்டு போப்பா என கூறுகிறார். வீட்டின் கேப்டனான சம்யுக்தா, ஓகே போதும் போதும் என இறுதியாக கத்தி ஒரு வழியாய் இருவரையும் பிரித்து விடுகிறார்.

சமாதானம் செய்ய முயற்சி

சமாதானம் செய்ய முயற்சி

அவர்களுக்குள் நடக்கும் சண்டையை பார்த்து மொத்த ஹவுஸ்மேட்ஸும் மிரட்சி அடைந்துள்ளனர். மாறி மாறி தகாத வார்த்தைகளால் வாக்குவாதம் செய்யும் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர்.

இன்று ஓவர் டோஸ்

இன்று ஓவர் டோஸ்

பாலாஜியும் சரி சனம் ஷெட்டியும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. இருவருக்கும் இடையில் இதுபோன்று அடிக்கடி சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று என்றாலும், இன்று கொஞ்சம் ஓவர் டோஸாகவே சென்றுள்ளது.

பாலாஜி மோசமான ஆட்டிட்யூட்

பாலாஜி மோசமான ஆட்டிட்யூட்

ஏற்கனவே சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என்றும் அவன் இவன் என்றும் பேசி சண்டைப் போட்டார். அதேபோல் பாலாஜியும், யோவ் அறிவில்லையா என கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசினார். அதோடு பலரிடமும் ஆட்டியூட் காட்டி வருகிறார் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X