சுத்தமா பிடிக்கல.. சீக்கிரம் போய் தொல என்ற பாலா.. எட்டி 'பேக்கில்' உதைத்த சனம்.. நடந்தது இதுதான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

ஆனால் அதன்பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டது போல் இருந்தது. எல்லாவற்றுக்கும் சனம் ஷெட்டி பாலாஜியின் பெயரை முன்னெடுத்தார்.

புகழ்ந்த சனம்

புகழ்ந்த சனம்

சுரேஷ் உடனான பிரச்சனை உட்பட பல விஷயங்களில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாய் இருந்தார் பாலாஜி. இதனால் தனக்கு பல விஷயங்களில் ஆதரவாய் நின்றார் என கமலிடமே பாலாஜி குறித்து புகழ்ந்தார் சனம் ஷெட்டி.

கடுப்பில் உள்ள சனம்

கடுப்பில் உள்ள சனம்

ஆனால் கடந்த வாரம் தங்க வேட்டை டாஸ்க்கில், வெற்றி பெற்ற போது சனம் ஷெட்டிக்கு பாலா கொடுத்த முந்திரிக்கொட்டை உள்ளிட்ட சில டாஸ்க்குகள் அவரை காயப்படுத்தியது. இதனால் அப்போது முதலே பாலா மீது கடுப்பில் உள்ளார் சனம்.

எனக்கு பிடிக்கவில்லை

எனக்கு பிடிக்கவில்லை

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் லேட் நைட்டில் கார்டன் ஏரியாவில் சனம் ஷெட்டியும் பாலாஜியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சனம் ஷெட்டி, எனக்கு உங்களை பிடிக்கவில்லை. நீங்கள் ஸ்ட்ரேட்டர்ஜிக்குகாக பேசுவது ஹர்ட்டாக்குகிறது என்றார் சனம்.

லிஸ்ட்லேயே இல்லை

லிஸ்ட்லேயே இல்லை

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, உங்களிடம் ஸ்ட்ரேட்டர்ஜியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நீயேல்லாம் என் லிஸ்ட்டிலேயே இல்லை என அசிங்கப்படுத்தினார் பாலாஜி முருகதாஸ்.

உங்களிடம் பேச மாட்டேன்

உங்களிடம் பேச மாட்டேன்

மேலும் எனக்கும் உங்களை சுத்தமாக பிடிக்கவில்லை. உங்களிடம் பேசவே பிடிக்காது என்றார் பாலாஜி. அதற்கு பதில் கூறிய சனம். நீங்கள் ஒரு விஷயம் செய்தால் அதன் பின்னால் ஒரு காரணம் இருக்கும். எனக்கு எமோஷன்ஸ் ரியலா இருந்ததான் பிடிக்கும். இனிமே நான் உங்களிடம் பேச மாட்டேன் என்றார் சனம்.

சீக்கிரம் போய் தொலை

சீக்கிரம் போய் தொலை

அதற்கு பேச வேண்டாம். உண்மையிலேயே நீ போகாதது எனக்கு வருத்தம் தான், எப்படி மிஸ்ஸானது என்று தெரியவில்லை. சீக்கிரம் கிளம்பு.. என் பார்வையில் இருந்து போய் தொல என்றும் நீ போய்விட்டால் எனக்கு சந்தோஷம் என்றார்.

சிரித்தப்படியே சென்ற பாலா

சிரித்தப்படியே சென்ற பாலா

அதற்கு நான் பேசாவிட்டால் உனக்கு எந்த வருத்தமும் இல்லையே என்று கேட்ட சனம், பாலாஜி நடந்து போகும் போது அவரது பின்னால் விளையாட்டாக உதைத்தார். மேலும் நீண்ட நாட்களாய் இப்படி உதைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது என்றார் சனம். அதற்கு சிரித்தப்படியே உள்ளே சென்றார் பாலாஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X