தயாரிப்பாளர்களிடம் தப்புத் தப்பா பேசி.. என் வாழ்க்கையை அழிக்கப் பார்த்தார்..சனம் மீது பாய்ந்த தர்ஷன்

Recommended Video

Bigg Boss Tharshan Press Conference | Sanam Shetty | Bigg Boss

சென்னை: தனது காதலியான சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தர்ஷன் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன். பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் தர்ஷன்.

இந்நிலையில் தர்ஷன் மீது அவரது காதலியான சனம் ஷெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தர்ஷன் தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்து முடித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறினார்.

ஒப்புக்கொண்ட தர்ஷன்

ஒப்புக்கொண்ட தர்ஷன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தனக்கு தவறான தொடர்பு இருப்பதாக கூறி தர்ஷன் தன்னை இணைத்து பேசுவதாகவும் வேதனைப்பட்டார் சனம் ஷெட்டி. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் பேசியதாவது 'எனக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என சனம் ஷெட்டிதான் கேட்டுக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி பிகினி போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். இதுகுறித்து கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த பிறகு என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தார் சனம்.

தற்கொலை மிரட்டல்

தற்கொலை மிரட்டல்


நான் எந்த ஒரு இடத்திற்கும் தனியாக செல்லக்கூடாது. எந்த ஒரு பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடமும் பேசக்கூடாது என்று என்னை சனம் ஷெட்டி டார்ச்சர் செய்தார். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்கும் அவருக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. அடிக்கடி என்னை திருமணம்
பிரச்சினைகள் இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

வாழ்க்கையை அழிக்கப்பார்த்தார்

வாழ்க்கையை அழிக்கப்பார்த்தார்

மேலும், எனக்கும் உனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பதை நீ மீடியாவிடம் சொல்லவேண்டும் என்று கூறினார். ஆனால், உனக்கு வேண்டுமானால் நீ சொல்லிக் கொள் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று நான் கூறி விட்டேன். அதேபோல என்னை வைத்து படம் எடுப்பதாக இருந்த மூன்று தயாரிப்பாளரிடம் சென்று என்னை பற்றி தவறாக கூறி என்னுடைய வாழ்க்கையை அழிக்க பார்த்தார்.

தொடர்ந்து டார்ச்சர்

தொடர்ந்து டார்ச்சர்

சனம்தான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷெரீனை அன்பாலோ செய்தார். ஆனால் ஷெரினிடம் நான் சனம் ஷெட்டியை காதலிப்பதை எப்போதோ கூறிவிட்டேன். அவரும் இனி நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டார். அதற்குப் பின்னரும் என்னை சனம் தொடர்ந்து டார்ச்சர் செய்து கொண்டே இருந்தார். எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நேற்று பேசியுள்ளார். இவ்வாறு தர்ஷன் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X