நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பழி சுமத்துகிறார்.. தர்ஷன் குறித்து கதறும் காதலி சனம் ஷெட்டி!

Recommended Video

தர்ஷனுக்கு financial help பண்ணது நானு ஆனா bigg boss க்கு அப்பறம் மாறிட்டாரு

சென்னை: உடன் நடிக்கும் நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக தன் மீது தர்ஷன் அபாண்டமாக பழி சுமத்துவதாக நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர், விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நேர்மையாகவும் தைரியமாகவும் நடந்து கொண்டதால் ரசிகர்களின் அன்பை பெற்றார். அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரினுடனும் நெருக்கமாக பழகி வந்தார்.

வெளியே காதலி

வெளியே காதலி

ஷெரினும் தர்ஷனும் பழகுவதை பார்த்து பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களே காதல்தானோ என குழம்பினர். அந்தளவுக்கு இருவரும் நெருக்கமாக பழகினர். தன்னை ஒரு தலையாக காதலித்த ஷெரினிடம் தர்ஷன் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறினார். ஆனாலும் ஷெரின் தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

20 படங்கள்

20 படங்கள்

தர்ஷனுக்கு வெளியே காதலி இருக்கும் தகவல் வெளியானதால், அவர் யார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமான ரசிகர்கள் அவர் சனம் ஷெட்டிதான் என ஒரு வழியாக கண்டுபிடித்தனர். மாடலான சனம் ஷெட்டி, தெலுங்கு மலையாளம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார் சனம் ஷெட்டி.

காதலிப்பேன்

காதலிப்பேன்

சனம் ஷெட்டியால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் வெற்றி பாதிக்கும் என கூறப்பட்டதால் தன்னுடைய காதலை கைவிடுவதாகவும் இனி தர்ஷன் வாழ்க்கையில் தான் இல்லை, ஆனால் இறுதி மூச்சு வரை தர்ஷனை காதலித்து கொண்டே இருப்பேன் என்றும் கூறி வீடியோ அழுதுக்கொண்டே வீடியோ வெளியிட்டார் சனம் ஷெட்டி.

கமல் வாய்ப்பு

கமல் வாய்ப்பு

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாய் வெளியேற்றப்பட்டார் தர்ஷன். இதனால் தர்ஷன் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷனுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக கூறினார்.

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

இந்நிலையில் அண்மையில் தனக்கு பிரமாண்டமான ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டார் தர்ஷன். இந்நிலையில் அவரது காதலியான சனம் ஷெட்டி சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

ஆதாரங்கள் வெளியீடு

ஆதாரங்கள் வெளியீடு

அதில் தன்னுடன் நிச்சயம் முடித்துவிட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். அதாவது, தர்ஷனுக்கும், தனக்கும் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.

சத்தியம் வாங்கினார்

சத்தியம் வாங்கினார்

அதே ஆண்டு ஜூன் 10ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருமணத்தை தள்ளி வைத்தார் என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் முடிந்து வெளியே அவரும் வரை நிச்சயதார்த்தம் குறித்து வாய் திறக்கக்கூடாது என்று தர்ஷன் சத்தியம் வாங்கினார் என்றும் கூறினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

கள்ளத்தொடர்பு..

கள்ளத்தொடர்பு..

மேலும் தன்னுடன் நடிக்கும் சினிமா நடிகர்களையும், தன்னையும் இணைத்துப் பேசும் தர்ஷன், நடிகர்களுடன் தனக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாகவும் தனது கேரக்டர் குறித்து தரக்குறைவாக பேசுவதாகவும் கூறினார். இதனை கூறி திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் சனம்ஷெட்டி வேதனை தெரிவித்தார். இதுவரை தர்ஷனுக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறிய சனம், அந்த பணத்தை திரும்ப பெறவேண்டும் என்பது தனது நோக்கமில்லை என்றும் கூறினார்.

நடிகை என்பதால்

நடிகை என்பதால்

மேலும் தர்ஷன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் சனம் ஷெட்டி கோரிக்கை விடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தர்ஷனை அனுப்பியது முதல், அவர் புகழ் பெற்றது வரை தனக்கு பங்கு உண்டு என்று கூறியுள்ள நடிகை சனம் ஷெட்டி, அதையெல்லாம் மறந்த தர்ஷன், நடிகை என்பதால் தன்னை திருமணம் செய்ய பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் கண்ணீர் மல்க கூறினார்

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் இப்போது தன்னுடன் பெரிய பெரிய ஆட்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தன்னை பற்றி புகார் கொடுத்தால் அதை எப்படி உடைக்க வேண்டும் என்று தனக்கு தெரியும் என்றும் தன்னை பற்றி பேசினால் அதை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்றும் தனக்கு தெரியும் என்றும் தர்ஷன் மிரட்டியதாகவும் சனம் ஷெட்டி தெரிவித்தார். இதுவரை ஒரு படத்தில் கூட தர்ஷன் நடிக்கவில்லை, அதற்குள் இப்படியொரு சர்ச்சையில் அவர் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X