கையை பிடித்திருக்கும் காதலர்.. என் உலகை ஒளிரச் செய்துவிட்டீர்கள்.. மீண்டும் காதலில் விழுந்த சனம்!

சென்னை: நடிகை சனம் ஷெட்டி தனது காதலர் குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Sanam Shetty Candle Light Dinner | Valentines Day, Tharshan

பரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இருந்த போதும் இதுவரை எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை சனம் ஷெட்டி. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சனம்.

ரசிகர்கள் மத்தியில்..

ரசிகர்கள் மத்தியில்..

இதில் ஆரம்பத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து வந்தார் சனம் ஷெட்டி. இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்தபோதும் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

ரசிகர்களை உற்சாகம்

ரசிகர்களை உற்சாகம்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சனம் ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சனம் ஷெட்டி செய்த போட்டோவும் அவரது டிவிட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கையை இறுகப் பற்றி

அதாவது சனம் ஷெட்டி தனது காதலருடன் டின்னர் சாப்பிடும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சனம் ஷெட்டியின் கையை இறுகப் பற்றியுள்ளார் அவரது காதலர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அந்த போட்டோவுக்கு என் உலகை ஒளிரச் செய்துவிட்டீர்கள் மோனே என்று பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதலர் மலையாளியா?

காதலர் மலையாளியா?

மேலும் சிலர் உங்களின் காதலர் மலையாளியா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் காதலரின் முகத்தை காட்டுங்கள் சனம் ஷெட்டி என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சனம் ஷெட்டி ஏற்கனவே இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷனை காதலித்தார்.

தர்ஷனுடன் காதல்

தர்ஷனுடன் காதல்

தர்ஷனுடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்டார்.

புகார் அளித்த சனம்

புகார் அளித்த சனம்

இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி.

மீண்டும் காதலில்

மீண்டும் காதலில்

மேலும் இருவரும் மாறி மாறி பிரஸ் மீட்டு கொடுத்து தங்களின் பக்க நியாயத்தை கூறி வந்தனர். அவர்களின் காதல் முறிவு விவகாரம் பல நாட்களில் ஊடகங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்திருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X