எங்கள ஏன் ரெஃபரன்ஸா எடுத்தீங்க? ரியோவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கால் டாஸ்க்கில் தங்களின் பெயரை ரெஃபரன்ஸாக எடுத்தது ஏன் அனிதாவும் சனம் ஷெட்டியும் ரியோவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினர்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது . இதில் 7 போட்டியாளர்கள் கால் செண்டர் ஊழியர்களாகவும் 7 போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர்.
இதில் நேற்றைய டாஸ்க்கில் ரியோ, ஆஜித்துக்கு கால் செய்தார். அப்போது பேசிய அவர் அன்பு என்பது அழகானது என்பதை கூற அனிதாவையும் சனம் ஷெட்டியையும் எடுத்துக்காட்டாய் கூறினார்.

அழகாய் இருக்கிறது
அதாவது, கேமாக பார்ப்பவர்கள் சனம் ஷெட்டி மற்றும் அனிதா. இவர்கள் இங்கே நடக்கும் விஷயங்கள் வெளியே எப்படி காட்டப்படும் என்பதை பற்றி யோசிப்பவர்கள். அவர்களே எங்களுக்குள் நல்ல ஃபிரண்ட்ஷிப் இருக்கிறது என்று கூறினர். அது ரொம்பவே அழகாய் இருக்கிறது என்று நல்லவிதமாகதான் கூறினார்.

கான்ஷியஸா இருக்கோமா?
ஆனால் நம் பெயரை ஏன் ரெஃபரன்ஸா ரியோ எடுத்தாரு என வெளியே கார்டன் ஏரியாவில் அனிதாவுடன் டிஸ்கஸ் செய்தார் சனம் ஷெட்டி. நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் பிரண்ட்ஸா, இமேஜ் கான்ஷியஸா இருக்கோமா? இதை போய் நான் உள்ளே கேட்க போகிறேன் என ரிகர்சல் பார்த்தார் சனம் ஷெட்டி.

லெப்ட் அன்ட் ரைட்?
தெடர்ந்து அதே வேகத்தில் உள்ளே சென்ற சனம் ஷெட்டி, பெட்ரூம் ஏரியாவில் இருந்த ரியோவிடம், நாங்கள் மட்டும்தான் இந்த வீட்டில் அன்பாய் இருக்கிறோமா? வேறு யாரும் இல்லையா என கேட்டு ரியோவை சனம் ஷெட்டியும் அனிதாவும் லெப்ட் அன்ட் ரைட் வாங்குகின்றனர்.

யாருக்கு இருக்கணும்?
தொடர்ந்து பேசும் சனம் இமேஜ் கான்ஷியஸ் யாருக்கு அதிகமா இருக்கணும் எனக்கா உங்களுக்கா? நீங்கதான் நாங்கள், மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கான்ஷியஸா இருக்கிறோம் என்று கூறினீர்கள் என்றார். கூடவே சேர்ந்த அனிதா, இங்கே இமேஜ் கான்ஷியஸா இங்க நிறைய பேர் இருக்காங்க ரியோ, நீங்களும் தான் என்றார்.

மன்னிப்பு கேட்ட ரியோ
அதனைக்கேட்ட ரியோ, உங்களின் ஃபிரண்ட்ஷிப்பை பற்றி பாராட்டிதான் பேசினேன். தப்பா எதுவும் பேசவில்லை. அப்படி தவறாக பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றார். ஆனால் அனிதாவும் சனமும் காதிலேயே வாங்கவில்லை. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கேமராவிடம் சென்று பேசிய ரியோ, நான் சனம் மற்றும் அனிதாவை பற்றி ரொம்ப தப்பா பேசிட்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்றார்.

நாங்க என்ன மான்ஸ்டர்ஸா?
அப்போது குறுக்கிட்ட அனிதா அப்போ உங்க பேரையும் சேர்த்து சொல்லுங்க என்னை மாதிரி அனிதா, என்னை மாதிரி சனமும் நினைக்கிறாங்கன்னு சொல்லுங்க என்றார். அதனை மறுக்காத ரியோ, அதை அப்படியே கேமராவிடம் சொன்னார். இருப்பினும் விடாது சனம் அடுத்தவங்க ஃபிரண்ட்ஸ் ஆகுறது இயற்கையானது.. எங்க ஃபிரண்ட்ஷிப் ஆச்சரியமானதா? அப்போ நாங்க என்ன மான்ஸ்டர்ஸா என்றார்.

மைண்ட் யுவர் வோர்டுஸ்
தொடர்ந்து தப்பான காலர் என்று சனம் கூறியதால் தப்பான காலர்ன்னு எப்படி சொல்லலாம் மைண்ட் யுவர் வோர்ட்ஸ் என ஆவேசமான ரியோ. உங்களை பற்றி நல்லபடியாக பேசியதை ஏன் தப்பா பேசியதாக புரிந்துகொள்கிறீர்கள். என் விளையாட்டை எப்படி தப்புன்னு சொல்லலாம் என்று கேட்கிறார்.
Recommended Video

ஓடிரு என எச்சரிக்கை
அனிதாவும் சனமும் ரியோவிடம் சண்டை போடுவதை பார்த்து ரசித்து ரசித்து சிரிக்கின்றனர் பாலாஜியும் ஷிவானியும். இருந்தும் விடாமல் சனம் ஷெட்டி பேசியதால் கடுப்பான ரியோ, நீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன்.. ஓடிரு என எச்சரித்தார்.


Click it and Unblock the Notifications











