Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆரி, அனிதா, சனம்.. பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கே.. மீண்டும் சந்தோஷ தருணங்கள் நிறைந்த புரமோ!
சென்னை: நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் சந்தோஷ தருணங்கள் என்கிற பெயரில், ரியோவின் எவிக்ஷன் வீடியோவை போட்டுட்டாங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
ஆரி, பாலாவை அதிகம் காட்டாமல் அந்த சந்தோஷ தருணங்கள் வீடியோவை போட்டதற்கு எதிர்ப்புகள் குவிந்தன.
புது ஹேர்ஸ்டைலில் கலக்கும் ஜனனி ஐயர்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இந்நிலையில், மூன்றாவது புரமோ என்கிற ஞாபகமே இன்றி, புரமோ 2 என மூளை குழம்பி எடிட்டர் போட்டுள்ள சந்தோஷ தருணங்கள் புரமோவில் ஆரி, பாலா, ரியோ என அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
எப்படியாவது ரியோவுக்கு
பிக் பாஸ் டைட்டிலை இந்த வாரம் எப்படியாவது ரியோ ராஜுக்கு பெற்றுத் தர வேண்டும் என்கிற முனைப்பை விஜய் டிவி பயங்கரமாக காட்டி வருவது பச்சையாக தெரிவதாக ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் காரணங்களோடு அடுக்கி கமெண்ட் செய்து கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர். வெளியே இருந்து வந்தவர்களும், ஆரியை பற்றி எடுத்துக் கூறி, பாலாவை வீட்டில் இருந்து கிளப்பும் வேலையை மறைமுகமாக செய்து வருகின்றனர்.
ஆரி மிஸ்சிங்
நேற்று ஒளிபரப்பப்பட்ட மொக்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில், போடப்பட்ட சந்தோஷமான தருணங்கள் ஏவியில் மொத்தமும் ரியோ மட்டுமே தெரிந்தது ரசிகர்களை கடுப்பாக்கியது. உங்க செல்லப் பிள்ளைக்கே டைட்டிலை தூக்கிக் கொடுக்கணும்னா, ஏன் இத்தனை நாட்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள் என விளாசி வருகின்றனர்.
ஆரி இருக்கிறார்
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில், ரியோ மட்டுமின்றி, ஆரி, பாலாஜி, ரம்யா பாண்டியன், சோமசேகர், கேபி என இறுதிச்சுற்றுக்கு தேர்வான அனைத்து போட்டியாளர்களின் சந்தோஷத் தருணங்களும் இடம் பெற்றுள்ளன. ஆரி இருப்பதை பார்த்து, அடித்த அடியில் விஜய் டிவி பணிந்து விட்டது என்று அவரது ஆர்மியினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குழம்பிய எடிட்டர்
மூன்றாவது புரமோவை தற்போது வெளியிட்ட பிக் பாஸ் எடிட்டர் ஏதோ குழப்பத்தில் புரமோ 2 என்றே அதை வெளியிட்டு, நெட்டிசன்கள் மத்தியில் நல்லா வாங்கிக் கட்டி வருகிறார். அவசரத்தில் மிஸ்டேக் செய்தாலும், அதை மாற்றி மீண்டும் போடக் கூட முடியாதா என வெளுத்து வருகின்றனர்.
ஆரிக்கு அரவணைப்பு
அன்பு கேங் மொத்த கூட்டமாக உள்ள நிலையில், ஆரிக்கு கிராண்ட் ஃபினாலே வாரத்தில் எந்தவொரு சப்போர்ட்டும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல தடைகளையும் பிரச்சனைகளையும் மீறி சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் ஆரிக்கு ஆறுதலாக உள்ளே வந்து அரவணைக்கும் காட்சிகள் இந்த புரமோவில் வைரலாகி வருகிறது.
கிராண்ட் ஃபினாலே வாரமா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் போலவே படு மொக்கையாக இருக்கு என்றும், இது கிராண்ட் ஃபினாலே வாரமாகவே தெரியவில்லை. பழைய டாஸ்க்குகள், நெகிழ்ச்சியான தருணங்கள் என டிவிக்கு முன்னாடியே ஏவிக்களை போட்டே ஓட்டுகின்றனரே.. போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க்குகளை கொடுத்து அவர்களை ஹைலைட் பண்ணாதானே ஓட்டுக்கள் பெருகும் போட்டியாளர்களின் தனித் திறமையை வெளிக்காட்ட விடாமல் மீண்டும் கும்பல் ஆட்டத்தையே வைப்பது சரியில்லை என விமர்சித்து வருகின்றனர்.