என்னப்பா தர்ஷன்.. உங்க ஆளு எப்பவும் அவரு கூடவே இருக்காங்க.. அடிக்கடி போட்டோ வருது.. ஏதாவது விசேஷமா?!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி அடிக்கடி முன்னணி நடிகருடன் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இவரது துணிச்சலான பேச்சு மற்றும் அனைவரையும் அனுசரிக்கும் கேரக்டரால் மக்களால் கவரப்பட்டார்.
இதனால் இவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிமாக நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

தர்ஷனின் காதலி
வெளியே வந்தாலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக கூறினார் கமல். தர்ஷன் மாடலான சனம்ஷெட்டி என்பவரை காதலித்து வருகிறார்.

மிகுந்த வேதனை
தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் ஷெரினுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் மிகுந்த வேதனைக்குள்ளானார் சனம் ஷெட்டி.

சமாதானம்
மனம் உடைந்து வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டார் சனம் ஷெட்டி. பின்னர் இருவரும் சமாதானம் ஆனார்கள்.

சிம்புவுடன் நெருக்கம்
ஆனாலும் இருவருக்குள்ளும் பழையப்படி உறவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சனம் ஷெட்டி நடிகர் சிம்புவுடன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகிறது.

என்ன இதெல்லாம்?
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்னப்பா தர்ஷன் என்ன இதெல்லாம் என கேட்டுள்ளதோடு, உங்களுக்காக வருந்துகிறேன் என்றும் கூறியுள்ளனர்.
வெட்கமா இல்லையா
அதேநேரத்தில் சனம் ஷெட்டியையும் விளாசி இருக்கின்றனர். காதலன் இருக்க கவர்ச்சியான உடையில் சிம்புவுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து வெட்கமாக இல்லையா என கேட்டு வருகின்றனர்.
ஏதாவது விசேஷமா?
அதே நேரத்தில் அடிக்கடி இருவரும் இப்படி சந்திக்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகிறதே, நீங்கள் இருவரும் இணைந்து ஏதாவது படத்தில் நடிக்க போகிறீர்களா அல்லது வேறு ஏதேனும் விசேஷமா என்றும் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications