எவிக்ஷனில் இருந்து தப்பித்த சனம் ஷெட்டி, வேல் முருகன்.. என்ன பண்ணி ஜெயிச்சாங்க தெரியுமா?
சென்னை: அடுத்த வார எவிக்ஷனில் இருந்து நடிகை சனம் ஷெட்டி மற்றும் பாடகர் வேல்முருகன் தப்பித்து விட்டனர்.
Recommended Video
10ம் நாள் போட்டியில் வெற்றிப் பெற்றதால், அந்த இருவரையும் ஹவுஸ்மேட்ஸ் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது.
எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கில் முதல் ஆளாக வெளியேறிய சனம், இப்போ எப்படி தப்பிச்சாங்க தெரியுமா?

ஜோடி பொருத்தம் செம
ஆடலும் பாடலும் நிகழ்ச்சியிலே இந்த இருவரும் தான் ஜோடி என பிக் பாஸ் போட்ட முடிச்சு, கடைசியா நடந்த பவுலில் பந்து போடும் போட்டியிலும் தொடர்ந்தது. இருவரும் இணை பிரியாமல் விளையாடியது மட்டுமின்றி, வேல்முருகன் செஞ்ச சில வேலைகளால் பலரும் கடுப்பாகும் படியும் அந்த இந்த புது ஜோடி வெறுப்பேற்றியது.

சபாஷ் சரியான போட்டி
பிக் பாஸ் தமிழ் 4ல் இன்னமும் பிசிக்கல் டாஸ்க் வரலையே என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பந்து போடும் போட்டி அரங்கேறியது. ஒரு சின்ன கண்ணாடி பவுலில், சரியா பந்தை யார் போடுறாங்களோ, அவங்க ஒரு போட்டியாளரை வெளியேற்ற முடியும் என்கிற அறிவிப்புடன் அந்த போட்டி துவங்கியது.

யாருக்கு யார் பார்ட்னர்
பாலாஜி முருகதாஸ் - சுரேஷ், ஆரி - ஷிவானி, ரம்யா பாண்டியன் - ஆஜீத், ஜித்தன் ரமேஷ் - ரேகா, கேபி - அனிதா சம்பத், வேல்முருகன் - சனம் ஷெட்டி, சோமசேகர் - சம்யுக்தா, ரியோ - நிஷா என 16 பேரையும் ஆளுக்கு ஒரு பார்ட்னர் என ஜோடி சேர்த்து பவுலுக்குள் பந்து போடும் விளையாட்டு செம சூப்பராக நடந்தது.

சனமை பெரிசா கண்டுக்கல
ரியோ ராஜ், பாலாஜி, ஆரி, ரம்யா பாண்டியன், ஷிவானி, ஏன் நிஷா எல்லாம் சரியா பவுலுக்குள் பந்து போட்டு அசத்தினர். டஃப் ஆன போட்டியாளர்களை முதலில் வெளியே அனுப்பும் குறிக்கோளுடன் செயல்பட்ட அவர்கள், சனம் ஷெட்டியையும், வேல்முருகனையும் பெரிய பொருட்டாக மதிக்கவே இல்லை.

எவிக்ஷனில் இருந்து எஸ்கேப்
இதனால், இறுதியில் சனம் ஷெட்டி - வேல்முருகன் டீம் அந்த போட்டியில் ஈஸியா வின் பண்ணி இந்த வார எவிக்ஷனில் இருந்து ஈஸியா எஸ்கேப் ஆகிட்டாங்க, அப்பவும் நம்ம வேல்முருகன் சனம் ஷெட்டியை விடுவதாக தெரிவதில்லை. சேரன் சார் எல்லாம் இப்போ இதை பார்த்தா ரொம்பவே ஃபீல் பண்ணுவாரு..

எல்லாம் பிக் பாஸ் வேலை
முதல் ஆளாய் தன்னை மொட்டை தலை சுரேஷ் தலைமையில் 7 பேரும் வெளியே அனுப்பிட்டங்கன்னு அழுது புலம்பிய சனம் ஷெட்டிக்காக இன்னொரு எஸ்கேப் ஆகும் போட்டியை வைத்து பிக் பாஸ் சேவ் பண்ணிட்டாரு பா.. ஆஜீத், சனம் ஷெட்டி, வேல்முருகனை எல்லம இந்த வாரம் வெளியே அனுப்பாம பிக் பாஸ் பக்கா பிளான் போட்டு காப்பாத்திட்டாருப்பா என்றும் குறை கூறி வருகின்றனர்.

யார் வெளியே போவா
இதனால், இந்த வாரம் யார் தான் பா வெளியே போவாங்க என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆஜீத்திடம் இருந்து எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் திருடு போனால் அவர் வெளியே போக வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால், ரேகா அல்லது கேபிக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











