For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலாஜியை ஒன் சைடா லவ் பண்ணும் சனம்.. இப்படி பச்சையா புரபோஸ் பண்ண சொல்றாரே.. என்னமோ நடக்குது?

  |

  சென்னை: இன்னைக்கு ஃபுல்லா பட்டிமன்றத்தையே வச்சி ஓட்டுனா ரசிகர்கள் கடுப்பாகிடுவாங்கன்னு தெரிஞ்சிக்கிட்ட பிக் பாஸ் எடிட்டர், தேவையில்லாத ஆணியை எல்லாம் புடுங்கி போட்டுட்டு, அடுத்த உலக மகா கேம் விளையாட்டு காட்சிகளை இணைத்து இருந்தார்.

  பட்டிமன்ற பழசுக்கு இது பரவாயில்லை என ஆறுதல் அடைந்த பிக் பாஸ் ரசிகர்கள் அந்த கன்றாவியையும் பார்த்து தொலைவோம் என தூக்கத்தை விட்டுட்டு பார்க்க, முதல் ஆளாக சனம் அவுட்டானார்.

  உடனே பாலாவை கூப்பிட்டு ரொமான்ஸ் பண்ண சொல்லிட்டாரு, அப்புறம் எங்கே இருந்து தூங்குறது.. என்னடா நடக்குது இங்கே என ரசிகர்கள் வில்லு பட வடிவேலு மாதிரி முழிச்சிட்டு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..

  இப்பவாச்சும் காட்டுனீங்களே

  இப்பவாச்சும் காட்டுனீங்களே

  பிக் பாஸ் வீட்டின் அழகுப் பதுமை, அட்மாஸ்பியர் ஹீரோயினை இப்பவாச்சும் காட்டுனீங்களே என அவர் தப்பு தப்பா தடுமாறி படிச்சதையும் ரசிச்சு பார்த்தாங்க, கடைசிய மியூசிக்கல் சேர் கேம் பத்தித்தான் புள்ள அந்த ஆத்து ஆத்துச்சுங்கறது சீக்கிரமா புரிஞ்சுடுச்சு.. பட்டிமன்றத்துல ஷிவானி பேசுச்சா? இல்லையா? எடிட்டர் ஏன் கட் பண்ணிட்டீங்க அவங்க ஆர்மி தனியா ஒரு சண்டையே போட்டுட்டு இருக்கு.

  வேல்முருகன் இருக்க மியூசிக் பாக்ஸ் எதுக்கு

  வேல்முருகன் இருக்க மியூசிக் பாக்ஸ் எதுக்கு

  வேல்முருகன் இருக்க மியூசிக் பாக்ஸ் எதுக்குன்னு நினைச்ச பிக்பாஸ், அவரையே மியூசிக்கல் சேர் போட்டிக்கு கண்ணை கட்டிவிட்டு பாட வைத்து விட்டார். அவரும், தன்னுடைய பாடல்களில், இஷ்டத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரிகளை போட்டு பாட ஆரம்பிக்க, முதல் ஆளாக சனம் ஷெட்டி அவுட்டானாங்க.. அப்போதான இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

  இதுக்கு ஆசையை பாரு

  இதுக்கு ஆசையை பாரு

  அவுட்டான சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் என்ன ரொமான்ஸ் பண்ணனும் என வம்பிழுக்க, ஹவுஸ்மேட்கள் எல்லாம் ஒரே குஷியானார்கள், பார்த்த ஆடியன்ஸும் தான். பாலாஜிக்கு என்ன பிடிக்காது, என்ன எனிமியா பாக்குறாரு, அதனால, அவரே என்ன வந்த புரபோஸ் பண்ணட்டும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கேட்டு பாலாஜியை அப்செட் பண்ணிட்டாங்க..

  கோர்த்து விட்ட கேபி

  கோர்த்து விட்ட கேபி

  சும்மா இருந்த சனம் ஷெட்டிக்கு, எடுத்து கொடுத்த கேபி, பாலாஜியை நல்லாவே கோர்த்து விட்டுடுச்சு, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுவீங்கன்னு பார்த்தா, சனத்தை பத்தி பத்து நல்ல வார்த்தை சொல்லணும்னு கேபி நல்லா ஏத்தி விட, அடிக்கவே வந்துட்டாரு பாலாஜி.. அப்புறம் வேண்டா வெறுப்பா சனம் ஷெட்டியை புரபோஸ் பண்ண கொடுமை இருக்கே.. மகா கேவலம்.

  மண்டியிட்ட பாலாஜி

  மண்டியிட்ட பாலாஜி

  லவ்வர் பாய் மாதிரி சனம் ஷெட்டியிடம் மண்டியிட்ட பாலாஜி, அலைபாயுதே மாதவன் பேசிய வசனத்தை காப்பி அடித்து, சனம் ஷெட்டியிடம் தேவையில்லாம பின்னாடி சுத்தாத, நீ நினைக்கிறது உனக்கு ஒரு போதும் கிடைக்காது, ஒன் சைடா லவ் பண்ணாத என சொல்லாமல் சொல்லி சனம் ஷெட்டியை நேராவே நோஸ் கட் பண்ணிட்டாரு..

  இப்படி அலையுதே சனம்

  இப்படி அலையுதே சனம்

  கடைசியா பாலாஜி ஐ லவ் யூ சொல்லாமல் அங்கிருந்து எழுந்து வந்துட்டார். அதை சொல்லலையேன்னு ஃபீல் பண்ண சனம் ஷெட்டியை பார்த்த ரசிகர்கள், என்ன இந்த பொண்ணு இப்படி அலையுதே, இதே சுரேஷ் தாத்தா புரபோஸ் பண்ணியிருந்தா என்ன சண்டை வலிச்சிருக்கும் என திட்டத் தொடங்கி விட்டனர். இந்த ஒன் சைடு லவ் வொர்க்கவுட் ஆகுமா? பிக் பாஸ் என்ன முடிச்சு போட காத்துக்கிட்டு இருக்காரோ.. வெயிட் பண்ணி பார்ப்போம்.

  இது என்ன நியாயம்

  இது என்ன நியாயம்

  பொதுவா அவுட்டானவங்க தான மத்தவங்க சொல்ற டாஸ்க் பண்ணனும், இங்கே அவுட்டானவங்க சொல்றதை உள்ள உட்கார்ந்து இருக்கவங்க பண்ணனும்னு சொல்றது என்ன நியாயம் என சில தீவிர மியூசிக்கல் சேர் விளையாட்டு பிரியர்கள் கேட்டு வருகின்றனர். நாடா? காடா? டாஸ்க் கூடத்தான் ரியோ படிச்சது, ஒண்ணு விளையாடினது ஒண்ணா இருந்துச்சு, ஷோவை பார்த்துட்டு போவியான்னு அதற்கும் விளக்கங்கள் வந்து விழுகின்றன.

  English summary
  Balaji Murugadoss proposed Sanam Shetty after Sanam out from the music chair game. Although Balaji accepted and try to propose her but not say I Love You to her finally.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X