ஹேப்பி பர்த்டே சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டில் களை கட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டியின் 35வது பிறந்தநாள் கொண்டாட்டம் பிக் பாஸ் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நவம்பர் 12ம் தேதி 1985ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் நடிகை சனம் ஷெட்டி.

அம்புலி, வால்டர், கதம் கதம், சவாரி, திருட்டுப் பயலே 2, சினிமா கம்பெனி என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே சனம் ஷெட்டி

ஹேப்பி பர்த்டே சனம் ஷெட்டி

பெங்களூருவில் 1985ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி பிறந்தவர் சனம் ஷெட்டி. மாடலிங், சினிமா என தொடர்ந்து போராடி வரும் சனம் ஷெட்டி இந்த ஆண்டு பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கொண்டாடினார். சனம் ஷெட்டியின் 35வது பிறந்தநாளை சக போட்டியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

கேக் கொண்டு வந்த அனிதா

கேக் கொண்டு வந்த அனிதா

சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் கொடுத்து அனுப்பிய கேக்கை சனம் ஷெட்டியின் உயிர்த் தோழியான அனிதா சம்பத் எடுத்து வந்தார். உடனே எல்லா ஹவுஸ்மேட்களும் ஒன்று திரண்டு சனம் ஷெட்டிக்கு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

லேட்டா வந்த பாலா

லேட்டா வந்த பாலா

ஓஹோ சனம் பாடலை சர்ப்ரைஸ் சனம் என மாற்றி ரியோ பாட அனைத்து ஹவுஸ்மேட்களும் சேர்ந்து பாடி சனம் ஷெட்டியின் கேக்கை வெட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, வழக்கம் போலவே பாலாஜி முருகதாஸ், இதிலும் லேட்டா வந்து கலந்து கொண்டார். சனம்க்கு மனதார வாழ்த்து சொன்னாரா என்று கூட எபிசோடில் காட்டவில்லை.

தர்ஷன் வாழ்த்து சொல்லலையே

தர்ஷன் வாழ்த்து சொல்லலையே

சனம் ஷெட்டியின் சொந்த பந்தங்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரும் வீடியோ காலில் சனம் ஷெட்டிக்கு வாழ்த்து சொல்லி வந்தனர். குசும்பு பிடித்த நெட்டிசன்கள், போன சீசன் போட்டியாளரான தர்ஷன் வாழ்த்து சொல்லவில்லையே என நக்கலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X