சனம் ஷெட்டி எப்படி சமாதானம் ஆனாங்க? மகனே பாலான்னு அப்படி பேச ஆரம்பிச்சுட்டாங்க.. ஒண்ணும் புரியல!

சென்னை: முதல் நாள் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பாலாவுக்கு அம்மாவாலாம் என்னால நடிக்க முடியாதுன்னு ஓவரா அழுது புலம்பி அப்படி சீன் போட்ட சனம் ஷெட்டி, அடுத்த நாள் ஒண்ணுமே நடக்காத மாதிரி பாலா கூட பேசுறாரு, ஆரி கூட ஆடுறாரு என்னதான் நடக்குதுன்னே புரியல..

பிக் பாஸ் வீட்டின் இந்த சீசன் சண்டைக் கோழியாகவே சனம் ஷெட்டி மாறி விட்டார்.

பாலா ஒரு பக்கம் சண்டை போட்டால், மறுபக்கம் சனம் ஷெட்டியின் சண்டை தான் பிக் பாஸ் வீட்டில் களை கட்டுகிறது.

பாலாவுக்கு அம்மா

பாலாவுக்கு அம்மா

பாட்டி சொல்லைத் தட்டாதே ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் பிக்பாஸ் வீட்டில் நல்ல குழப்பத்தையும், சண்டைகளையும் கிளப்பி விட வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் இஷ்டத்துக்கு ஜோடிகளை கோர்த்து விட்டு நல்லாவே நாரதர் வேலை பார்த்தனர். அதிலும், சனம் ஷெட்டியை பாலாவின் அம்மாவாக்கினார்கள். சம்யுக்தாவை ஆக்கி இருந்தால் பாலாவும் சனமும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.

நடிக்க மாட்டேன்

நடிக்க மாட்டேன்

அந்த டாஸ்க்கில் பாலாவுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன், நடிக்க மாட்டேன்னு நல்லா நடிச்சி, தனி ஒரு டிராமாவை சனம் ஷெட்டி சூப்பராக நடத்தினார். மேலும், ஆரி உடன் சாப்பாட்டை கொட்டிய சண்டையையும் நல்லாவே போட்டு எடிட்டர்களின் கண் பார்வைக்கு சிக்கி, நிகழ்ச்சியில் அதிக ஸ்பேஸ் பிடித்து விட்டார்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் என்ன மாயம் நடந்ததோ? மந்திரம் நடந்ததோ தெரியவில்லை. பிக் பாஸ் சொல்லியும் நடிக்காமல் இருந்த சனம் ஷெட்டி, அழகா டிரெஸ் எல்லாம் மாற்றிக் கொண்டு, ரியோ ராஜ் உடன் கட்டிப் பிடித்துக் கொண்டு, சமையல் கட்டில் செம சிரிப்புடன் வேற லெவலில் ஆளே மாறி விட்டார்.

மகனே பாலா

மகனே பாலா

பாலாவுக்கு தனது நிஜ வாழ்க்கையிலேயே அம்மா சரியில்லை என சொன்ன நிலையில், பிக் பாஸ் வீட்டிலும் சனம் ஷெட்டியை அம்மாவாக போட்டு ஏமாற்றி விட்டார் பிக் பாஸ். சனம் ஷெட்டியும், வேறு வழியில்லாமல், மகனே பாலா, அந்த பத்திரத்தை பாட்டி கிட்ட கொடுத்துடுப்பா, நான் உன் அம்மா சொல்றேன்ல என்கிற ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

கண்டுக்காத பாலா

கண்டுக்காத பாலா

சனம் ஷெட்டி அம்மாவாக நடித்து பேச ஆரம்பித்தாலும், அப்பா ரமேஷ் சொன்னாலும், எவன் பேச்சையும் நான் கேட்க மாட்டேன். எனக்கு எந்த சொந்தமும் வேண்டாம் சொத்து தான் வேண்டும் என அந்த பத்திரத்தை கட்டிக் கொண்டு அழுதது கடைசி வரைக்கும் எல்லா போட்டியாளர்களையும் ரசிகர்களையும் கடுப்பேற்றியது.

ஆரியுடன் அரட்டை

ஆரியுடன் அரட்டை

இந்த கொடுமை மட்டும் போதாமல், நடிகர் ஆரி மற்றும் அனிதாவுடன் இணைந்து கொண்டு, இந்த தீபாவளி வாரத்தை தெறிக்கவிடலாமா என்று வேற கேமரா முன்னாடி வந்து நின்று சனம் ஷெட்டி பேசியதை பார்த்த ரசிகர்கள், நேத்து இதுங்க கூடத்தானே சண்டை போட்டா, நல்லா நடிக்கிறீங்க சனம் என வாயாற பாராட்டி மனதார திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X