நாகரீகமே இல்லாமல் நடந்துகொண்டார்.. சேரை உடைத்தார்.. பாலா மீது பகீர் குற்றச்சாட்டை கூறிய சனம்!
சென்னை: பாலாஜி நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்டதாக சனம் ஷெட்டி கமலிடம் குற்றம் சாட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கமலிடம் பேசிய பாலாஜி தன் மீது இல்லாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் சொல்கிறார்கள் என முறையிட்டார்.
குறிப்பாக ஆரியும் சனம் ஷெட்டியும் நான் பழசை மனதில் வைத்துக் கொண்டு விளையாடுவதாக கூறுவதை கூறினார். மேலும் தான் நேர்மையில்லாமல் விளையாடுவதாகவும் தெரிவித்தார்.

டைனிங் டேபிள் சேர்
அதனை தொடர்ந்து பேசிய சனம் ஷெட்டி, ஆரிக்கும் பாலாஜிக்கும் வாக்குவாதம் நடந்த போது, தான் தனக்கு தெரியும் என்று ஒரு விஷயத்தை சொல்லப் போனப்போது பாலாஜி ச்சை என்று கூறி டைனிங் டேபிள் சேரை உடைத்து விட்டார்.

நாகரீகம் இல்லாமல்
ரொம்பவே நாகரீகம் இல்லாமல் இருந்தது அவரது பிஹேவிங் என்றார். அதற்கு பதிலளித்த பாலாஜி, நான் சேரை நகர்த்திதான் வைத்தேன் அது விழுந்துவிட்டது, உடைக்கவில்லை என்று கூறினார்.

கமல் அட்வைஸ்
இதுகுறித்து விசாரித்த கமல் நீங்கள் கோபமாக இருக்கும் போது எதார்த்தமாக விழுந்தாலும் தள்ளிவிட்டதாகதான் ஆகும். சிரித்துக் கொண்டிருக்கும் போது தள்ளிவிட்டால் பெரிதாகாது. உங்களுக்கு கோபம் வரும் போது வெளியே போய் புஷ் அப்ஸ் எடுங்கள், மூச்சு வாங்கும் கோபமாக பேச தோனாது என்ற அட்வைஸ் கூறினார்.

இன்னும் ஏன் வைத்திருக்கிறீர்கள்?
பாலாஜி பிக்பாஸ் வீட்டில் சேரை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அநாகரீகமாக பேசுவது, சேரை உடைப்பது, அடிக்க பாய்வது என இவ்வளவு குடைச்சல் கொடுக்கும் பாலாஜியை ஏன் இன்னும் உள்ளே வைத்திருக்கிறீர்கள் என கொந்தளித்துள்ளனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











