ஆரி பல பிரச்சனைகளை கண்டுக்கவே இல்லை.. குற்றச்சாட்டுக்களை அடுக்கிய சனம்.. அங்கேயே பாய்ந்த ரமேஷ்!
சென்னை: நடிகர் ஆரி பல பிரச்சனைகளை கண்டுக்கவே இல்லை என அவரது கேப்டன்ஷிப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார் சனம் ஷெட்டி.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஆரிதான் கேப்டனாக இருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரியின் கேப்டஷிப் குறித்து ஹவுஸ்மெட்களிட்ம் கேட்டார் கமல்.
அப்போது சுச்சி, ஜித்தன் ரமேஷ் உட்பட பலரும் ஆரியின் கேப்டன்ஷிப் குறித்து பாஸிட்டிவாக கூறினார். ஆனால் சனம் ஷெட்டி மட்டும் மாறி மாறி பேசினார்.

சனம் குற்றச்சாட்டு
ஹவுஸ்மெட்ஸ்களின் அன்பை பெற வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை கண்டும் காணாமல் இருந்தார். பாத்திரம் கழுவ சொன்னபோது கூட அந்த டீமிடம் சொல்லாமல், அவர் வேலையை செய்ய தவறிவிட்டார் என்றார்.

விசாரிக்கவில்லை
மேலும் பாத்ரூம் கழுவுவதில் ரமேஷுக்கும் சுச்சிக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது கூட அந்த பிரச்சனையை என்னவென்று விசாரிக்கவில்லை. இதனால் அந்த பிரச்சனை முடிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு ஹவுஸ்மெட்டாக எனக்கு ஆரி அவரது வேலையை சரியாக செய்யவில்லை என்று தோன்றியது என்றார்.

ஏன் இப்போ சொல்ற?
அப்போது குறுக்கிட்ட ஜித்தன் ரமேஷ், அதை ஏன் இப்போ சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கும் ஒரு ஹவுஸ்மெட்டாய் எனக்கு அந்த பிரச்சனை சரியாகவில்லை என்று தோன்றியது என்றார் சனம். அதனைக் கேட்ட கமல் ரமேஷிடம் என்ன நடந்தது என்றார்.

ரமேஷ் விளக்கம்
தொடர்ந்து பேசிய ரமேஷ், நான் குளிக்க போயிருந்தேன், என்ன பிரச்சனை என்றே எனக்கு தெரியவில்லை சார். இப்போதான் லெமன் பிரச்சனை தீர்ந்தது, அதற்குள் பாத்ரூம் பிரச்சனையா என்று தோன்றியது. சுச்சியும் சேர்ந்து க்ளீன் செய்திருந்தால் 20 நிமிடத்தில் செய்திருக்கலாம் என கூறினார்.

கடுப்பான ரமேஷ்
ஆரியின் கேப்டன்ஷிப் குறித்த கேள்விக்கு, தேவையில்லாத பிரச்சனைகளை சனம் ஷெட்டி பேசியது ஹவுஸ்மெட்ஸ்களை கடுப்பாக்கியது. தேவையில்லாமல் மற்றவர் பிரச்சனையை ஏன் இங்கு பேச வேண்டும் என ரமேஷ் அங்கேயே கடுப்பானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











