கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. மோசமான வார்த்தையால் கண்டித்த சனம் ஷெட்டி!
சென்னை: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்தை நடிகை சனம் ஷெட்டி வன்மையாக கண்டித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்த 31 வயது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. அந்த பெண் மருத்துவர் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணிபுரிந்ததாக கூறப்படுகின்றது.

பெண் மருத்துவர் கொலை: அதனால், களைப்பின் காரணமாக அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர் மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் சற்று ஓய்வு எடுக்க எண்ணி அங்கு தூங்கி இருக்கிறார். அதன் பின்தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அடுத்த நாள், அதாவது 9 ஆம் தேதி, கொடூரமா கொல்லப்பட்டு அரை நிர்வாணமாக அந்த மருத்துவரின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சனம் ஷெட்டி கண்டனம்: நாட்டையே உலுக்கி உள்ள இந்த கொடூரமான கொலை குறித்து, நடிகை சனம் ஷெட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், நாம் மகாலட்சுமி தேவியை கொண்டாடி வருகிறோம். அதே சமயம், நடமாடும் தெய்வமாக பார்க்கப்படக்கூடிய பெண்கள் கொலை செய்யப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்.
தொடர்ந்து 30 மணி நேரமாக மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற நினைத்த அந்த டாக்டர் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டுள்ளார். அவளின் கடைசி நேரத்தின் அழுகையும், அவல நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இது வலிமை மற்றும் புரிந்து கொள்வதற்கான நேரம் இல்ல. இது கோபத்திற்கான நேரம்.
கிளைம் தி நைட்: கொல்கத்தாவில் இருக்கும் துணிச்சலான மக்கள் அந்த இரவே போராட்டத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் உங்களிடம் ஏற்கனவே இருந்ததை மட்டுமே நீங்கள் மீட்டெடுக்க முடியும். பெண்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை நாம் அனைவரும் ஒன்றிணைத்து மீட்டெடுக்க வேண்டும். சென்னையில் 'கிளைம் தி நைட்' என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்க விரும்புகிறேன். இரவும் ஆண்களுக்கு மட்டும் தான் சொந்தமா?
மனித குளத்திற்கு எதிரானது: அனைத்து மனித குலத்திற்கும் எதிரான இந்த கொடூரமான குற்றத்திற்கு உடனடி நீதி கோரி இந்த அமைதிப் பேரணியில் என்னுடன் சேருமாறு எனது நண்பர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள், ஊடக சகோதரர்கள் மற்றும் மனிதநேயம் மற்றும் நீதியின் மீது இன்னும் நம்பிக்கை கொண்ட அனைவரையும் அழைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











