கண்கலங்கிய சனம் ஷெட்டி.. கவலைப்படாத ஷிவானி.. எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எனக்கு வேண்டாம்… வேற லெவல்மா நீ!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு அலாவுதீன் பூதமாக எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை கவர்வதற்காக எவிக்‌ஷனுக்கு தேர்வான 8 பேரும் ஒரு இருட்டு அறையில் முரட்டு குத்து சம்பவம் போல, ஒருவரை ஒருவர் வெளியேற்ற செம கேம் ஆடினர்.

எல்லோருக்கும் முன்னதாக மாஸ்டர் பிளான் போட்டு விளையாடிய நம்ம மொட்டை சுரேஷ், முதலாவதாக சனம் ஷெட்டியை வெளியேற்றினார்.

மக்கள் ஓட்டு தேவையில்லை

மக்கள் ஓட்டு தேவையில்லை

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எவிக்‌ஷன் ஏதும் இல்லை. இரண்டாவது வாரம் வீட்டை விட்டு யார் வெளியே போகப் போறாங்க என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வராங்க. எவிக்‌ஷனுக்கு தேர்வான 8 பேரில் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வைத்திருக்கும் நபர் வெளியேற மாட்டார் என்கிற புது விஷயத்தை இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இருட்டு அறையில்

இருட்டு அறையில்

இருட்டு அறையில் முரட்டு குத்து போல, 8 பேரையும் ஒரு இருட்டான அறையில் க்ரூப் டிஸ்கஸன் பண்ண வைத்தார் பிக் பாஸ். அதில், மெஜாரிட்டியானவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் தங்களுக்காக வாதட வேண்டும். அதில் தோற்பவர்கள் அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும்.

முதலாவதாக

முதலாவதாக

நம்ம மொட்டை தல சுரேஷ் முதலாவதாக சனம் ஷெட்டிக்கு இந்த எவிக்‌ஷன் பாஸ் தேவையில்லை என்றும், அவரை இந்த வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புவதாகவும் கூறினார். மற்ற போட்டியாளர்களும் சனம் ஷெட்டியை வெளியேற்ற ஆமோதித்த நிலையில், சனம் வெளியேற்றப்பட்டார்.

அழுது புலம்பிய சனம்

அழுது புலம்பிய சனம்

இதுவரை பல்வேறு மொழிகளில் 22 படங்கள் நடித்து விட்டேன் என சனம் ஷெட்டி சொல்லும் போது தான் அது நமக்கே தெரிகிறது. அந்த அளவுக்கு சினிமாவில் போராடி வரும் தான் இதுவரை ஜொலிக்கவே இல்லை என வெளியே வந்தும் அழுது புலம்பினார் சனம் ஷெட்டி. அனிதா சம்பத் மற்றும் ஆரி அவருக்கு ஆறுதல் கூறினர்.

கூலாக வெளியே வந்த ஷிவானி

கூலாக வெளியே வந்த ஷிவானி

அடுத்ததாக சுரேஷ் சக்கரவர்த்தி, செம கேம் பிளானோட ஷிவானிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு நிச்சயம் இந்த எவிக்‌ஷன் ஃப்ரீபாஸ் தேவைப்படாது. அவரை எப்படியாவது அதிக ஓட்டுக்கள் போட்டு ரசிகர்கள் காப்பாற்றி விடுவார்கள் எனக் கூற, மற்றவர்களும் அதற்கு ஆமாம் சாமி போட்டனர். ஷிவானியும் கூலாக வெளியேறினார்.

பொறாமை பட்ட சனம் ஷெட்டி

பொறாமை பட்ட சனம் ஷெட்டி

உனக்கு 2 மில்லியன் ஃபேன்ஸ் இன்ஸ்டாகிராமில் இருக்காங்க, நிச்சயம் உன்னை சேஃப் பண்ணிடுவாங்கன்னு கூலாக வெளியேறிய ஷிவானியை பார்த்து அழுது புலம்பிய சனம் ஷெட்டி பேசினார். எனக்கு எவிக்‌ஷன் பாஸ்லாம் தேவை இல்லை என்பது போல ஷிவானி கெத்தாக நடந்து கொண்டதை பார்த்த அவரது ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X