நான் பொய் சொல்ல மாட்டேன்.. சத்தம் போட்டு கதறிய சனம் ஷெட்டி.. எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

சென்னை: நீதிமன்ற செட்டப்பில் அர்ச்சனா அக்காவை பார்த்து சனம் ஷெட்டி, நீங்க சொன்னதில் 2 பொய் இருக்குன்னு பேசி அடுத்த சண்டையை ஆரம்பித்து வைத்தார்.

இந்த சீசனில் சனம் ஷெட்டி இல்லை என்றால், ரொம்பவே போரடித்துப் போயிருக்கும்.

சுரேஷ் தாத்தா, பாலாஜி முருகதாஸ், அர்ச்சனா, சம்யுக்தா என எல்லோரிடமும் ரவுண்டு கட்டி சண்டை போட்டு வருகிறார்.

சர்ச்சையை கிளப்பும் சனம்

சர்ச்சையை கிளப்பும் சனம்

பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி சண்டையை பெரிதாக்குவது சனம் ஷெட்டி தான். அரை எலுமிச்சை பழம், முந்திரிக்கொட்டை, தறுதலை, பாலாஜியை எட்டி உதைத்து, சுரேஷ் சக்கரவர்த்தியை வாடா போடா என பேசியது, அனிதாவுக்கு ஏத்தி விட்டது என ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

வெற்றி, தோல்வி

வெற்றி, தோல்வி

பாலாஜி முருகதாஸுக்கு சனம் ஷெட்டிக்கும் இடையேயான பிரச்சனை தான் பெரிய விவகாரமே, ஆனால், அதில் பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றார் என சுசித்ரா தீர்ப்பு கொடுத்தார். அதன் பிறகு, சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி வக்கீலாக மாறி ரியோவுடன் போட்டிப் போட்டு வாதாடியதை பார்த்த சுச்சி சனம் ஷெட்டிக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தார்.

சுசித்ரா கேம்

சுசித்ரா கேம்

பாலாஜி முருகதாஸ் தான் சூப்பராக கேம் ஆடுகிறோம் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். அவரை வைத்து சுசித்ரா தான் வேற ஒரு மைண்ட் கேம் ஆடி வருகிறார். சீக்கிரமே பாலாஜிக்கு பலத்த அடி விழும் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வரும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வாடா போடா சண்டை

வாடா போடா சண்டை

சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏற்கனவே வாடா, போடா சண்டை நடந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே என்னதான் பிரச்சனை என்றே தெரியாத நிலையிலும், சனம் ஷெட்டிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் எதிரான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. பாலாஜியின் உதவியால் சுரேஷ் சக்கரவர்த்தியை சனம் ஷெட்டி தோற்கடித்தார்.

2 பொய் சொன்ன அர்ச்சனா

2 பொய் சொன்ன அர்ச்சனா

சனம் ஷெட்டிக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பாக சுச்சி கொடுத்த ரெண்டு நிமிஷ பிரேக்கில், அர்ச்சனா அக்கா நீங்க என்ன பத்தி ரெண்டு பொய் சொன்னீங்க, எலுமிச்சை பழம் கேட்ட மேட்டரில் நான் கிச்சன் டீம்லயே இல்லை என ஒரு பொய் பற்றி மட்டுமே பேசி, அமைதியா இருந்த அர்ச்சனாவை புயலா மாத்தி விட்டார்.

நான் பொய் சொல்லமாட்டேன்

நான் பொய் சொல்லமாட்டேன்

பாலா வழக்கில் தோற்றாலும், பாலா தனக்கு ஆதரவாக வாதாடியதும் அந்த பிரச்சனையை மறந்தே போன காரியகார சனம், சுரேஷ் வழக்கில் ஜெயித்த பிறகும், அர்ச்சனா மற்றும் சுரேஷ் பக்கம் தனது கத்தியை திருப்பி மீண்டும் சண்டையை உருவாக்கினார். பின்னர், அவரே சத்தம் போட்டு கதறி அழுது, நான் பொய் சொல்ல மாட்டேன் என படு பயங்கரமாக அலறி அழுததும், அவரை சமாதானம் செய்ய ஹவுஸ்மேட்கள் விரைந்தனர்.

சமாதானம் தேவை இல்லை

சமாதானம் தேவை இல்லை

புதிய தலைவர் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு அர்ச்சனா அக்கா, சனம் ஷெட்டி உடன் சமாதான பேச்சுக்கு வந்தார். ஆனால், சனம் ஷெட்டி, அர்ச்சனா மற்றும் சம்யுக்தாவின் பேச்சை கேட்கவே இல்லை. யார் மேல தப்புன்னு வீக்கெண்ட் ஷோவில் கமல் சார் வந்து சொல்லட்டும் என கறாராக இருந்து விட்டார். நினைச்சதை சாதிச்சாச்சு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X