கல்யாணமாகிடுச்சா? நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு.. ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன சனம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளரான சனம் ஷெட்டி தனது நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்திருப்பதை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா? என கேட்டதற்கு, சனம் ஷெட்டி பதில் அளித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் போட்டியாளரான தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டிக்கும், தர்ஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரேக்கப்பும் ஆனது.

ஆனால், நடிகை சனம் ஷெட்டி திருமணமான பெண்கள் வைத்துக் கொள்வதை போலவே நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

தர்ஷனுடன் காதல்

தர்ஷனுடன் காதல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் போட்டியாளரான தர்ஷனும் சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். பின்னர் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியது. இருவருக்குள்ளும் இருந்த காதலும் அதனை தொடர்ந்து பிரேக்கப் ஆனது.

இந்த சீசனில்

இந்த சீசனில்

சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்புவர்களை தேடி கண்டுபிடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் விஜய் டிவி, இந்த சீசனில் நடிகை சனம் ஷெட்டியை களமிறக்கியதும், ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தன.

மக்கள் தலைவி

மக்கள் தலைவி

ஆனால், தனது ரியல் முகத்தை காட்டி இந்த சீசனில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தையே நடிகை சனம் ஷெட்டி பிடித்து விட்டார். இறுதிப் போட்டியாளராக சனம் ஷெட்டி வருவார், என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சனம் ஷெட்டியின் எவிக்‌ஷன் சுரேஷ் தாத்தாவின் எவிக்‌ஷனை போலவே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.

நெற்றி வகிடில் குங்குமம்

நெற்றி வகிடில் குங்குமம்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சேலை கட்டி அழகாக காட்சியளித்த தருணங்களில் நடிகை சனம் ஷெட்டியின் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு இருந்தது. சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆனதா? இல்லையா? ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டை வைத்திருக்கிறார் என ரசிகர்கள் குழம்பித் தவித்து வந்தனர்.

கல்யாணமாகிடுச்சா

கல்யாணமாகிடுச்சா

இந்நிலையில், சனம் ஷெட்டியிடமே தற்போது ஒரு ரசிகர் நேரடியாகவே அந்த கேள்வியை ட்வீட் போட்டு கேட்டுள்ளார். ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வச்சிருக்கீங்க, உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா என்று கேட்டே விட்டார். அவரது கேள்விக்கு சனம் ஷெட்டியும் பதில் அளித்திருப்பது தான் ஹைலைட்.

திருமணம் ஆகல

திருமணம் ஆகல

ஆஹா.. நிறைய பேர் என்னிடம் இதே கேள்வியைத்தான் கேட்கிறாங்க.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நண்பர்களே, உங்கள் ஆசியுடன் கூடிய விரைவிலேயே திருமணம் ஆகும் என நினைக்கிறேன். எங்க குடும்பத்தில் உச்சந்தலை வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது இயல்பான ஒன்று, திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் வைப்போம் என்றார்.

கன்னடர்

கன்னடர்

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் குங்குமம் வைப்பது ஏன் என்றும் சனம் ஷெட்டி விளக்கிய நிலையில், அந்த ரசிகரின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள், அவங்க கன்னடர் நண்பரே, கர்நாடகாவில் திருமணம் ஆகாத பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைக்கும் வழக்கும் உள்ளது என விளக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X