ஆரி உங்களை பார்க்கத் தான் வந்தேன்.. சனம் ஷெட்டியோட இந்த ஒரு வார்த்தை போதும்.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த சனம் ஷெட்டி, ஆரியிடம் உங்களை பார்க்கத் தான் வந்தேன் என சொன்னதை கேட்ட ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

இன்றைய புரமோவிலேயே இதை காட்டி இருக்கலாம். சனம் ஷெட்டி அதிகமாக பேசும் எந்த காட்சியையும் நிகழ்ச்சியின் எடிட்டர் ஃபோகஸ் பண்ணவில்லையோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

இன்றைய எபிசோடில் அந்த ஒரு வார்த்தையைத் தவிர மற்றவை எல்லாமே செம போரிங்காக இருந்தது என்பதே அதிகப்படியான ரசிகர்களின் கருத்து.

பெருங்கோபம்

பெருங்கோபம்

சனம் ஷெட்டியின் அசத்தலான என்ட்ரியை புரமோவில் காட்டவில்லையே என்கிற பெருங்கோபத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவியை ஒரு வழி செய்து விட்டனர் கமெண்ட் பக்கத்தில். நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு சனம் ஷெட்டியின் என்ட்ரி செம சர்ப்ரைஸாகவும் க்யூட்டான மொமென்ட்டாகவும் இருந்தது.

ரொம்பவே சைலன்ட்

ரொம்பவே சைலன்ட்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்துள்ள சனம் ஷெட்டி ரொம்பவே சைலன்ட்டாக இருப்பதாகவே தெரிகிறது. அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா செய்த அலப்பறைகளில் ஒரு பர்சன்ட் கூட அவர் செய்யவில்லை. வேண்டுமென்றே சனம் ஷெட்டியின் காட்சிகளை கட் செய்து விட்டார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது.

உங்களை பார்க்கத் தான் வந்தேன்

உங்களை பார்க்கத் தான் வந்தேன்

ஆரியை பார்த்த சனம் ஷெட்டி, அவரிடம் உங்களை பார்க்கத்தான் வந்தேன் ஆரி என பேசிய அந்த ஒரு வார்த்தையே ஆரியின் ஆர்மியினருக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக இருந்தது. இன்னும் இருவரும் இணைந்து பேசும் காட்சிகளை எதிர்பார்த்த ரசிகர்களை விஜய் டிவி ஏமாற்றி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பாலாவை மதிக்கல

பாலாவை மதிக்கல

வெளியே வந்த சனம் ஷெட்டிக்கு, பிக் பாஸ் கோல்மால் செய்து தன்னை வெளியேற்றியது பற்றியும், பாலா தன்னை பற்றி பேசிய பேச்சுக்களும் அப்படியே மனதில் இருப்பதாகவே தெரிகிறது. பாலாவை பெரிதாக சனம் மதிக்கல என்பதும், இன்றைய ஷோவில் அம்பலமாகி உள்ளது.

ஆரி அணியில்

ஆரி அணியில்

மேலும், தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேனே டாஸ்க்கில், ஆரி அணியிலேயே சனம் ஷெட்டி விளையாடினார். மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியை பார்த்ததும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆரி மற்றும் சனம் ஷெட்டி சந்திப்பு காட்சிகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

ஒரே ஆறுதல்

ஒரே ஆறுதல்

ரியோ, சோம், கேபி, பாலா மற்றும் ரம்யாவுக்கு ஆறுதல் சொல்ல அர்ச்சனா, நிஷா, ரேகா, சம்யுக்தா, சுசித்ரா, வேல்முருகன், ஜித்தன் ரமேஷ் என ஒரு பட்டாளமே இருக்கு. ஆரிக்கு ஆறுதல் சொல்ல, சனம் ஷெட்டி மட்டும் தான் உள்ளார். யார் ஆதரவும் இல்லை என்றாலும், ஆரி தனது தனித்துவத்தை நிலை நாட்டி மக்களின் ஓட்டுக்களை அள்ளி வெற்றிப் பெறுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சேர்ந்து நடிக்கணும்

சேர்ந்து நடிக்கணும்

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஐஸ்வர்யா தத்தா மற்றும் லாஸ்லியாவுடன் இணைந்து ஆரி நடித்துள்ளார். அதே போல, இந்த சீசன் போட்டியாளரான சனம் ஷெட்டியுடன் இணைந்து ஆரி ஒரு படம் பண்ணனும் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. இருவரும் நிச்சயம் வெளியே வந்த பிறகு அதைப் பற்றி யோசிப்பார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X