கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்.. பொறுப்பில்லாத யூடியூபர்களால் பறிபோன உயிர்.. சனம் ஷெட்டி கண்டனம்!

சென்னை: மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி, உடல் பருமனை குறைக்க யூடியூப்பை பார்த்து வெங்காரம் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெங்காரம் சாப்பிட்ட பின்னர், அவருக்கு தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து மாணவி உயிரிழந்துள்ளார். கலையரசியின் மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, நடிகை சனம் ஷெட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், மார்க்கெட்டிங் செய்யலாம், ப்ரோமோஷன் செய்யலாம் தவறு இல்லை. நானும் மீடியாவில் தான் இருக்கிறேன். நானும் சில பிராண்டுகளை ப்ரமோஷன் செய்கிறேன். ஆனால், எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் பொறுப்பில்லாத சில யூடியூபர்களால் அப்பாவி மாணவியின் உயிர் போய்விட்டது. மதுரையைச் சேர்ந்த கலையரசி என்கின்ற 19 வயது கல்லூரி மாணவி, உடல் எடையை குறைக்க வேண்டும் என்கிற ஆசையில், வெங்காரம் என்கின்ற போரக்ஸ் பவுடரை பயன்படுத்தி இருக்கிறார். youtubeஐ பார்த்து இதை நாம் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் எடை குறைந்து விடும் என்ற ஆசையில் அதை தண்ணீரில் கலந்து குடித்து இருக்கிறார். குடித்த சில நிமிடங்களிலேயே, வாந்தி, பேதி ஏற்பட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து இருக்கிறார். துடித்து துடித்து வேதனை அனுபவித்து பிறகு தான் அவர் உயிரிழந்து இருக்கிறார்.

madurai girl Death Sanam Shetty
Photo Credit:

சனம் ஷெட்டி: இதன் மூலமாக நான் ஒரு சிறிய வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன். தயவுசெய்து எந்தவிதமான மருந்தையும் நீங்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். முறையாக ஒரு மருத்துவரிடம் சென்று அதற்காக மெடிசனை நீங்கள் உட்கொள்ள வேண்டும். தயவுசெய்து இதுபோல யூடியூபை பார்த்தோ, இன்ஸ்டாகிராமை பார்த்தோ எந்த விதமான மருத்தையும் உட்கொள்ளாதீர்கள்.

பொறுப்பில்லாத யூடியூபர்கள்: போரக்ஸ் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள், இதை பற்றி கூகுளில் தேடி இருந்தாலே இது எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது தெரிந்திருக்கும். இதை பயன்படுத்துவதால் அதிக பின் விளைவுகள் ஏற்படும். பத்து கிராமுக்கு மேல் இதை சாப்பிட்டால் உடல் கடுமையாக பாதிக்கும் என தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது. இதைப் பற்றி எந்தவிதமான தகவலையும் சொல்லாமல் யூடியூபில் எப்படி பொறுப்பில்லாமல் வீடியோவை பதிவிட்டார்கள். பொறுப்பு இல்லாத யூடியூபர்களால் இன்று ஒரு பெண்ணின் உயிர் பறிபோய் உள்ளது என சனம் ஷெட்டி வேதனையுடன் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X