Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி.. முழு பேட்டி வீடியோ!
சென்னை: சமூக வலைதளங்களில் பிக்பாஸ் தர்ஷன் குறித்து, பேசி சர்ச்சையை கிளப்பிய நடிகை சனம் ஷெட்டி கொடுத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
திருமண தீமில் உருவான கேலண்டர் ஷூட்டிங் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, நடிகர் சிம்பு குறித்தும், தர்ஷன் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
திருமணம் குறித்த கேள்விக்கு தனக்கு இது போன்று திருமணம் நடக்குமா என்றே தெரியவில்லை என சனம் ஷெட்டி ரொம்பவே ஃபீல் பண்ணி பேசியுள்ளார்.
வேற மாதிரி
நடிகை சனம் ஷெட்டியிடம் எடுத்த எடுப்பிலேயே சிம்பு குறித்து கேட்டதும், அவரை பற்றி ஏன் கேக்குறீங்க என அதிர்ச்சியான சனம் ஷெட்டி, பின்னர், சிம்பு முன்பு போல இல்லை, இப்போ வேற மாதிரி மாறிட்டார். நல்லா வொர்க்கவுட் செய்து, அப்துல் காலிக் ரோலுக்கு ஏற்றவாறு டோட்டலாக சேஞ்ச் ஆகிட்டார் என்றார்.
தர்ஷன் விவகாரம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக தன்னை நிச்சயம் செய்துவிட்டு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என மீடியாக்கள் முன் பேசி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்த கேள்விக்கு, தக்க நேரத்தில் அது குறித்து தான் விரிவாக பேசுவேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.
திருமணம் நடக்குமா?
திருமணம் தீம் கொண்ட கேலண்டர் போட்டோஷூட்டில், ராஜ்தானி பெண்ணாக நடிகை சனம் ஷெட்டி போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் விழாவில் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த போட்டோஷூட்டில் திருமணத்திற்கான அனைத்து விஷயங்களும் செய்யப்பட்டன. இது போன்று நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணம் நடக்குமா? என்பது தெரியவில்லை என ஃபீல் பண்ணி சனம் பேசி உள்ளார்.
வேண்டவே வேண்டாம்
தொடர்ந்து, எந்த மாதிரியான திருமணத்தை செய்து கொள்ள நீங்க ஆசைப்படுறீங்க என்ற கேள்விக்கு, பொறுமையிழந்த நடிகை சனம் தனக்கு கல்யாணமே வேண்டாம் என பொசுக்கு சொல்லிவிட்டார். மேலும், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும் படத்தின் கல்யாண காட்சி தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
சனம் ஷெட்டியின், சுவாரஸ்யமான இந்த பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க..