என்னால முடியல பிக் பாஸ்.. புலம்பித் தவித்த சனம் ஷெட்டி.. எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?
சென்னை: எந்தவொரு டாஸ்க் என்றாலும் ஜாலியா எடுத்து பண்ணும் சனம் ஷெட்டி, அதில் எப்படி சண்டையை கிரியேட் பண்ணி மீடியா வெளிச்சத்தை பெறலாம் என்பதையும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.
பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் ரமேஷுக்கு ஜோடியாகவும், பாலா மற்றும் ஷிவானிக்கு அம்மாவாகவும் அவருக்கு ரோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் ரமேஷுடன் ஜாலியாக டாஸ்க்கை ஆரம்பித்த சனம், இடையே திடீரென எனக்கு இந்த ரோல் பிடிக்கல என பிக் பாஸிடமே புகார் கொடுத்தார்.

சனம்னா சண்டைன்னு அர்த்தம்
தனக்கு அடிச்சது பிரச்சனை இல்லை. தாத்தா அடிச்சது தான் பிரச்சனைன்னு சுரேஷ் சக்கரவர்த்தி உடன் சண்டையை ஆரம்பித்த சனம் ஷெட்டி. தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் உடனும் பயங்கர சண்டை போட்டார். பின்னர், சனம் ஷெட்டிக்கு ஆதரவாக இருந்த அனிதாவுக்கும் அவருக்கும் முட்டிக் கொண்டது. இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் சனம்க்கும் ஆரிக்கும் முட்டிக் கொண்டது.

ரமேஷுடன் ரொமான்ஸ்
நடிகை ரேகா சென்றதும், அடுத்த டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷையும் சனம் ஷெட்டியையும் பிரிஸ்மா ஃபேஷன் ஷோவில் ஜோடியாக்கினார் பிக் பாஸ். அதே ஜோடியை தற்போது பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து ஜோடியாக்கி உள்ளார். ஆரம்பத்தில் ரமேஷுடன் ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த சனம் திடீரென கங்காவாக மாறினார்.

பாலாவுக்கு நான் அம்மா இல்லை
பாலாஜி முருகதாஸை ஒரு தலையாக நூல் விட்டுக் கொண்டிருந்த சனம் ஷெட்டி, ஷிவானியுடன் அவர் சேர்ந்து பழகுவதை நல்லா தெரிந்து கொண்ட பிறகு தான் அவரை முற்றிலுமாக படையப்பா நீலாம்பரியாக வெறுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தேவையில்லாமல் சண்டையும் போட்டார். இந்நிலையில், பாலாவுக்கு அம்மாவாக அவரை பிக்பாஸ் மாற்றி கோர்த்து விட்ட நிலையில், அந்த கதாபாத்திரத்தை ஏற்க அவரது மனம் ஒப்பவில்லை.

பிக் பாஸிடம் புகார்
மேலும், கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க, என்னால இந்த டாஸ்க்கை செய்ய முடியாது என முரண்டு பிடித்த சனம் ஷெட்டி கன்ஃபெஷன் ரூமிற்கு சென்று பிக் பாஸிடம் இது தொடர்பாக பேசியும் விட்டார். ஆனால், அந்த காட்சிகளை எடிட்டர் காட்டாமல் கத்தரிக்க, தொடர்ந்து உம்முனா மூஞ்சியாகவே சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார். இந்த டாஸ்க்கில் என்னவெல்லாம் பிரச்சனை பண்ண காத்திருக்கிறாரோ?


Click it and Unblock the Notifications











