சபாஷ்.. முதல் ஆளாக சேவான சனம்.. பாலாஜி தான் முந்திரிக்கொட்டைன்னு மூக்கை உடைச்சிட்டாங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் தான் 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் பெயர் எவிக்‌ஷன் லிஸ்ட்டுக்கு வந்தது.

இதில், மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு காப்பாற்றிய நபர் என்பதை லீக் செய்யாத கமல்ஹாசன், நடிகை சனம் ஷெட்டியை முதல் ஆளாக காப்பாற்ற பட்டவர் என சொல்லி சனமை சந்தோஷப்படுத்தினார்.

அப்பாடா, இந்த வாரம் நாம இல்லை என்கிற மகிழ்ச்சி வெள்ளத்தில் சனம் துள்ளிக் குதித்தார்.

11 பேர்

11 பேர்

இதுவரை அதிகபட்சமே 7 பேர் மட்டுமே எவிக்‌ஷனுக்கு தேர்வான நிலையில், இந்த முறை 11 பேரை பிக் பாஸ் போட்டியாளர்கள் மாற்றி மாற்றி தீயில் போட்டோக்களை போட்டு எரித்து எலிமினேட் பண்ணார்கள். அது பற்றி எல்லாம் கமல் பேசவே இல்லை. ரியோ, ஆரி, நிஷா, ரம்யா, ஆஜீத், வேல்முருகன், சுரேஷ், சனம், அனிதா, பாலாஜி உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினியாக தேர்வானார்கள்.

முதல் ஆளாக

முதல் ஆளாக

சனம் ஷெட்டிக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் நடைபெற்ற பேச்சுக்களை எடுத்து பேச ஆரம்பித்த கமல், 11 பேரில் முதல் ஆளாக நடிகை சனம் ஷெட்டியை சேவ் என்று சொன்னதும், அம்மணிக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, தனக்கு மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சிட்டாங்க என நன்றி கூறினார் சனம்.

நீ தான் முந்திரிக்கொட்டை

நீ தான் முந்திரிக்கொட்டை

அர்ச்சனா அக்காவை புகழ்ந்து சனம் ஷெட்டி பேசிக் கொண்டிருந்தபோது, நடுவில் இடை மறைத்து எலுமிச்சை பழம் கேட்டியே, அவங்க தரவில்லையே என பாலா நல்லாவே கோல் போட்டதை கமல் சார் முன்னிலையில் நடிகை சனம் ஷெட்டி சூப்பராக போட்டு உடைத்தது மட்டுமின்றி, அதற்கு பேர் தான் பாலா, நீ சொன்ன முந்திரிக்கொட்டை என பழிக்குப் பழி வாங்கினார்.

அனிதாவுக்கு சப்போர்ட்

அனிதாவுக்கு சப்போர்ட்

கமல் சார் இரண்டு கையாள தட்டி அனிதாவுக்கு பாராட்டுகள் கொடுத்தும் முதல் ஆளாக ஓடிப் போய் சனம் ஷெட்டி தான் அனிதாவை பாராட்டினார். நல்லா ஏத்தி விடுறான்னு சொன்ன சம்யுக்தாவுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. அர்ச்சனா அக்கா அங்கிருந்து நைஸா நகர்ந்து, யாருக்கு டீ வேணும் என கிளம்பியதை பார்த்த ரசிகர்கள் அதையும் கலாய்த்து வருகின்றனர்.

வேல்முருகன் கன்ஃபார்ம்

வேல்முருகன் கன்ஃபார்ம்

சனம் ஷெட்டியைத் தொடர்ந்து மற்ற 10 போட்டியாளர்களை குழுவாக பிரித்தார் பிக் பாஸ் கமல். நிஷா ரியோவை சேர்ந்து இருக்க சொன்ன கமல், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே இருக்காங்க, என கலாய்த்தார். கடைசியாக ரியோ, ரம்யா, ஜித்தன் ரமேஷ், பாலா, அனிதா ஆகியோர் சேவ் ஆனார்கள். ஆஜீத், வேல்முருகன், நிஷா, சுரேஷ், ஆரி ஆகிய 5 பேரில் கெஸ் பண்ணது போல வேல்முருகன் தான் வெளியே போவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X