நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தகுதியுள்ள மற்றும் தகுதி இல்லாத போட்டியாளர்களை பற்றி வெளிப்படையாக கூறும் நிலையில் வேல்முருகன் மட்டும் பட்டும் படாமல் அனைத்து நாமினேஷன்களையும் சந்தித்து வருகிறார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 23 | Samக்கு கோவம்லாம் வருமா

இந்நிலையில் பிக்பாஸ் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பாலாஜியை தவிர வேறு யாரிடமும் சண்டையிட்டது இல்லை.

அவ்வாறு தான் உண்டு தன் வேலையுண்டு என யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என நினைத்த வேல் முருகன் இப்பொழுது இப்டி நம்ப வெச்சி முதுகுல குத்தீட்டிங்களே என சனம் ஷெட்டியை புலம்ப வைத்துள்ளது.

பிக்பாஸ் வீடு களைகட்டியது

பிக்பாஸ் வீடு களைகட்டியது

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் தடபுடலாக நகரம் மற்றும் கிராமம் என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பிக்பாஸ் வீடு நேற்று களைகட்டியது.

சுவாரசியமான நிகழ்வு

சுவாரசியமான நிகழ்வு

எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் நான்கு மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளில் ஒன்று நாமினேஷன்.

புகைப்படங்களை எரிக்க வேண்டும்

புகைப்படங்களை எரிக்க வேண்டும்

இதுவரை நாமினேஷன்கள் போட்டியாளர்களின் முன்னிலையில் நேரடியாகவும் ஒரு சில சமயங்களில் கன்வேஷன் ரூம்மிலும் நடந்து வந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இதுவரைக் கண்டிராத வகையில் புது விதமாக நாமினேட் செய்ய விரும்பும் நபர்களின் புகைப்படங்களை எரிக்க வேண்டும் என்ற டாஸ்க் பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்கள் இடத்திலும் பற்றி எரிய வைத்தது.

வேல் முருகனிடம் புலம்பி

வேல் முருகனிடம் புலம்பி

சற்றும் எதிர்பாராத வகையில் ஒருவரை ஒருவர் நண்பர்களாக இருந்த போதும் புகைப்படங்களை எரித்து நாமினேஷன் செய்ய மறுபுறம் சனம் ஷெட்டி மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கணக்கில் பழைய பிரச்சினையை கையில் எடுத்து வேல் முருகனிடம் புலம்பி வருகிறார்.

15 ஆவது இடத்திற்கு

15 ஆவது இடத்திற்கு

நாமினேஷன் செய்த கையோடு வீட்டின் ஹாலில் அமர்ந்துகொண்டு பாலாஜி முருகதாசிடம் பேசிக்கொண்டிருந்த வேல்முருகனிடம் சென்று உங்களிடம் தனியாக பேசவேண்டுமென அழைத்துச்சென்ற சனம் ஷெட்டி, சென்ற வாரம் நடத்தப்பட்ட வெற்றியாளர்களின் தரவரிசை டாஸ்க்கின் போது தன்னை 15 ஆவது இடத்திற்கு செல்ல நீங்களும் ஏன் வாக்கு செலுத்தினீர்கள்.

முதுகில் குத்தியது

முதுகில் குத்தியது

நீங்களும் நானும் நிறைய விஷயங்களை பேசியுள்ளோம், இதுவரை நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் அப்படியிருந்தும் நேரில் பார்க்கும் போது நன்றாக சிரித்து சிரித்துப் பேசிவிட்டு இப்பொழுது இப்டி முதுகில் குத்தியது போல தனக்கு எதிராக ஓட்டளிப்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மிகவும் வருத்தத்தை

மிகவும் வருத்தத்தை

மேலும் இதுவரை நான் உங்களை எந்த ஒரு நாமினேஷனிலும் உங்களுக்கு எதிராக ஓட்டு அளிக்கவில்லை. அப்படி இருக்க நீங்கள் மட்டும் எனக்கு எதிராக ஓட்டு அளித்திருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

இதுக்கெல்லாமா புலம்புவாங்க

இதுக்கெல்லாமா புலம்புவாங்க

இப்படி நாமினேஷன் என்ற பெயரில் பிக்பாஸ் வீடே திடீரென ரணகளமாக பற்றி எரிந்து வரும் சூழலில் நடந்த விஷயத்தை மீண்டும் நினைவு படுத்தி வேல்முருகனிடம் சனம் ஷெட்டி புலம்பியது பார்க்கும் அனைவரையும் இதுக்கெல்லாமா புலம்புவாங்க என கேட்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X