Kamal Haasan: மக்கள் நீதி மய்யத்தின் மானத்தை வாங்கிய சனம் ஷெட்டி.. கமல் தான் அப்படி கேட்டாரா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சனம் ஷெட்டி விமர்சித்து வரும் நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனின் ஹோஸ்ட் சரியில்லை என்றும் விமர்சித்து வருகிறார்.
இதனால், கடுப்பான மக்கள் நீதி மய்யம் தொண்டர் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி மக்கள் நீதி மய்யத்தையும் அதன் தலைவர் கமல்ஹாசனையும் டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி என்டர்டெயின்மென்ட்டாக இல்லை என அதன் தொகுப்பாளர் கமல்ஹாசனே சொல்லும் அளவுக்குத்தான் நிகழ்ச்சி சென்றுக் கொண்டிருக்கிறது. ரசிக்கும் படி இல்லாததற்கு முதல் காரணமே கமல்ஹாசனின் ஹோஸ்டிங் தான் என கடும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டியை ரசிகர்கள் மக்கள் நாயகி என கொண்டாடினர். கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது நியாயமே கிடையாது என அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், அதே போல இந்த சீசனில் பிக் பாஸில் இருந்து அதை விட மோசமாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார் சனம் ஷெட்டி.
கமலிடம் கெஞ்சினார்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தில் சேர சனம் ஷெட்டி கெஞ்சினார் என்றும் கமல்ஹாசன் சனம் ஷெட்டியை உள்ளே சேர்க்காமல் துரத்தி விட்டார் என்றும் அந்த காண்டில் தான் இப்படி தொடர்ந்து கமலுக்கு எதிரான பேச்சுக்களை சமூக வலைதளங்களில் சனம் ஷெட்டி பேசி வருகிறார் என ஆதித்யா ராகவ் எனும் கமல் ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் மானம் போச்சு: அதற்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி, நீங்க ஒருத்தரே போதும் மக்கள் நீதி மய்யத்தை எக்ஸ்போஸ் செய்ய என பதிவிட்ட சனம் ஷெட்டி யாரு யாரிடம் கெஞ்சினார் என விசாரியுங்க என பதிவிட்டுள்ளார். சனம் ஷெட்டி இப்படியொரு ட்வீட்டை போட்ட நிலையில், அப்போ கமல் தான் உங்க கிட்ட கட்சியில சேர்ந்துக்கோங்கன்னு கெஞ்சினாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











