எவ்வளவு பெரிய ஸ்கேம் இது.. பிக் பாஸில் சௌந்தர்யா வெற்றி பெற இப்படியா? விளாசிய சனம்ஷெட்டி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று இந்த வீட்டில் இருந்து ஜாக்குலின் வெளியேறிய நிலையில் தற்போது இறுதி பட்டியலில் 7 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்து இருக்கும், சௌந்தர்யா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய மோசடி நடப்பதாக சனம் ஷெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைய இருக்கிறது. இதில் முத்துக்குமரன் வெற்றி வாகை சூட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் வீட்டிற்குள் வந்த பழைய போட்டியாளர்கள் பலர், சௌந்தர்யாவிற்கு வெளியில் பிஆர்ஓ வேலை நடப்பதாக கூறினார்கள். குறிப்பாக உள்ளே வந்த சுனிதா, சௌந்தர்யாவை குறிவைத்து பேசினார்.

bigg boss season 8 soundarya sanam shetty 8

பிஆர்ஓ டீம் வேலை செய்கிறது: எனக்கு இங்கே யாருமே கிடையாது, எனக்கு இங்கே யாருமே இல்லாத போது எனக்கு யார் ஓட்டுபோடுவா, ஆனால், சௌந்தர்யாவிற்கு வெளியில் பிஆர்ஓ டீம் வேலை செய்கிறது. இதனால் தான், வெளியேறினேன் என்று விஜய் சேதுபதி முன்பே, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கு, விஜய்சேதுபதியும், யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்கமுடியாது என்றார்.

bigg boss season 8 soundarya sanam shetty 8

எவ்வளவு பெரிய ஸ்கேம்: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் டூ பினாலே நாளை நடக்க இருக்கும் நிலையில், பிக் பாஸ் 8வது சீசன் இறுதிப்போட்டியில் சௌந்தர்யாவை வெற்றி பெற வைக்க மிகப்பெரிய மோசடி நடப்பதாக சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். சௌந்தர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கால் பாக்ஸில் பிக் பாஸின் மிஸ்டு கால் எண் பதிவிடப்பட்டுள்ளதாகவும், பார்ப்பவர்கள் சௌந்தர்யாவின் தனிப்பட்ட மொபைல் எண் என நினைத்து கால் செய்வதெல்லாம் ஓட்டாக மாறுவதாக கூறியுள்ளார்

மேலும், சௌந்தர்யாவின் காதலன் விஷ்ணு தனது இன்ஸ்டாகிராம் குரூப்பில் "அவசரம், இந்த எண்ணிற்கு கால் செய்யுங்கள்" என பிக் பாஸின் மிஸ்டு கால் எண்ணை பதிவிட்டதாகவும், இதனை பார்த்து பதறிப்போன சிலர் அந்த எண்ணிற்கு போன் செய்தபோது, அது சௌந்தர்யாவிற்கு ஓட்டாக மாறியதாகவும் சனம் ஷெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X