பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை ஆரி அர்ஜூனன் வென்றதை தொடர்ந்து அவருடைய பிக்பாஸ் நண்பர்களில் ஒருவரான சனம் ஷெட்டி அதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Aari Arjunan First Exclusive video | உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

அவர்களில் ஆரி அர்ஜுனன், அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்.

ட்ரியோ குரூப்பு..

ட்ரியோ குரூப்பு..

அவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தனர். இதனால் அவர்களை சம்யுக்தா, ட்ரியோ என்றே குறிப்பிட்டு வந்தார்.

நல்லவிதமாக பேசினார்..

நல்லவிதமாக பேசினார்..

சனம் ஷெட்டியும் அனிதாவும் பிக்பாஸிலிருந்து எவிக்ட்டான போதும் ஆரி அவர்கள் இருவரையும் தனித்துவமான போட்டியாளர்கள் என்றே கூறி வந்தார். அனிதாவும் சனமும் இல்லாத போதும் கூட அவர்களை நல்லவிதமாக தான் பேசி வந்தார்.

ஆரியை அணைத்து முத்தம்

ஆரியை அணைத்து முத்தம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்த சனம் ஷெட்டி, உங்களை பார்க்கதான் வந்தேன் பிரதர் என்று ஆரியை அணைத்து முத்தம் கொடுத்தார். மேலும் ஆரிக்கு ஆதரவாக அவருடன் நல்ல நட்பை பாராட்டினார்.

கப்போட வாங்க ஆரி

கப்போட வாங்க ஆரி

இதேபோல் அனிதாவும் தான் ஆரியிடம் கோபப்பட்டதை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். மேலும் வெளியே செல்லும் போது கூட அனிதாவும் சனம் ஷெட்டியும் கப்போட வாங்க ஆரி என்று கூறினர்.

வைரலாகும் போட்டோக்கள்

வைரலாகும் போட்டோக்கள்

அவர்கள் சொன்னது போலவே கப்பை வென்றார் ஆரி. ஆரி அர்ஜூனன் கப்பை பெற்ற போது அனிதா மற்றும் சனம் ஷெட்டி அவர்களே கப்பை வாங்கியது போல் கொண்டாடினர். அவர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

உண்மையின் வெற்றி

உண்மையின் வெற்றி

இந்நிலையில் ஆரி வென்றது குறித்து சனம் ஷெட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது. அவருடைய வெற்றி உண்மை, நீதி மற்றும் விடாமுயற்சியின் வெற்றி. அதுதான் ஆரி அர்ஜுனன்.... ஆரி பிரதர் நீங்கள் எல்லோருக்காகவும் வென்று விட்டிற்கள்.. என பதிவிட்டுள்ளார்.

கப்புடன் இருக்கும் போட்டோ

கப்புடன் இருக்கும் போட்டோ

இந்த பதிவில் அனிதாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார். விஜய் டிவிக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். மேலும் ஆரியுடன் தானும் அனிதாவும் கப்புடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

மாஸிவ் ஹிட்

மாஸிவ் ஹிட்

சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இந்த ட்ரியோவுக்குள் செம லவ் என பதிவிட்டுள்ளனர். மேலும் ஆரியிடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுங்கள் அந்தப் படம் மாஸிவ் ஹிட்டாகும் என்றும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X