தொடர் சர்ச்சைகள்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான சனம் ஷெட்டி!
Recommended Video
சென்னை: தர்ஷன் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறிய புகாரை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளார்.
மாடல் மற்றும் நடிகையான சனம் ஷெட்டி, இதுவரை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருவரும் தங்களின் திருமண நிச்சயதார்த்தை மறைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தர்ஷனுக்கு பேரும் புகழும் கிடைத்ததால் அவர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தர்ஷன் மறுப்பு
மேலும் தர்ஷன தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இந்நிலையில் தர்ஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சனம் ஷெட்டி கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். மேலும் சனம் ஷெட்டிதான் தன்னை டார்ச்சர் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அதோடு தன்னை கமிட் செய்த தயாரிப்பாளர்களிடம் தன்னை பற்றி தவறாக பேசினார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

மாறி மாறி குற்றச்சாட்டு
மேலும் சனம் ஷெட்டி, தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது எக்ஸ் லவ்வருடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என்றும் தர்ஷன் உறுதியாக கூறினார். தர்ஷன் மீது சனம் ஷெட்டியும் சனம் ஷெட்டியின் மீது தர்ஷனும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
நாசமா போச்சு
இந்த சர்ச்சைகளால் இன்று சனம் ஷெட்டி திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டானார். அப்போது தர்ஷனை விளாசி பலரும் டிவிட்டியிருந்தனர். டேய்.. ப்ளே பாய்.. தருமரு! அங்க ஒரு பொண்ணை அழவச்சிட்டு இங்க உன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு லைக் போட்டு சந்தோஷப்படுத்துற! உனக்கு இந்த ரணகளத்திலும் குதூகலம் கேட்குதுல..! ச்சே..உன் மீது இருந்த மதிப்பெல்லாம் நாசமா போச்சு மவனே..! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சனம் ஷெட்டி ட்ரென்டிங்
அதேநேரத்தில் இருவரும் பப்ளிசிட்டிக்காக இது போன்று ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருவதாகவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். #SanamShetty என்ற ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் இருந்தது. காலையில் பட்ஜெட் அறிவிப்பு வெளியான போது சனம் ஷெட்டி ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications