ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஆரிக்கு சனம் ஷெட்டி முத்தம் கொடுக்கும் அன்சீன் வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததே உங்களை பார்க்கத்தான் ஆரி என கூறிய நிலையில், அடுத்ததாக அவருக்கு முத்தமும் கொடுத்துள்ளார்.

இந்த காட்சியை ஏன் அன்சீனில் வச்சீங்க என நெட்டிசன்கள் பிக் பாஸ் எடிட்டரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர்.

முதல் ஆள்

முதல் ஆள்

பிக் பாஸ் வீட்டில் ஆரியை அனைவரும் ஒதுக்கித் தள்ளிய நிலையில், சனம் ஷெட்டி மட்டுமே பல இடங்களில் ஆரிக்கு சப்போர்ட்டாக இருந்துள்ளார். பெரிய அளவில் நட்பு ஏதும் பாராட்டவில்லை என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது நேர்மையின் சின்னம் ஆரி என சனம் பேசியது பாராட்டுக்களை அள்ளியது.

எவிக்‌ஷனில் சதி

எவிக்‌ஷனில் சதி

சனம் ஷெட்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர மாட்டார் என்றும், அவரை திட்டமிட்டே விஜய் டிவி வெளியே அனுப்பியது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். சனம் ஷெட்டியை விட அந்த வாரம் யாருமே குறைவான வாக்குகள் பெறவில்லையா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

வந்ததே உங்களுக்காகத்தான்

வந்ததே உங்களுக்காகத்தான்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் இந்த வாரம் அதிரடி என்ட்ரி கொடுத்த சனம் ஷெட்டிக்கு தனி புரமோ ஏதும் போடாமல் பாரபட்சம் காட்டியது விஜய் டிவி. மேலும், சனம் ஷெட்டி பேசும் பல காட்சிகளையும் அன்சீனில் தூக்கிப் போட்டு வருகின்றனர். வந்ததே உங்களுக்காகத்தான் ஆரி என சனம் சொன்ன அந்த வார்த்தை ஆரிக்கு பெரிய ஆறுதலை கொடுத்தது.

ஆரிக்கு முத்தம்

ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா பேசும் காட்சிகளை குறைவாகவே ஒளிபரப்புகின்றனர். தேவையில்லாத பல மொக்கை சீன்களை வைத்தே நிகழ்ச்சியை ஒட்டுகின்றனர். இந்நிலையில், ஆரிக்கும் அனிதாவுக்கும் சனம் ஷெட்டி முத்தம் கொடுத்த அன்சீன் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

நல்ல நட்பு

நல்ல நட்பு

ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டியின் நட்பு தான் இந்த சீசனில் உண்மையான நட்பு என்றும், இந்த ட்ரியோ பார்க்கவே சூப்பராக இருக்கு என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மூன்று பேருக்கும் நடுவே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் நடந்துள்ளது. நாமினேஷன் செய்துள்ளனர், சண்டை போட்டுள்ளனர். ஆனால், ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.

இறுதிச்சுற்றுக்கு வர

இறுதிச்சுற்றுக்கு வர

ஆரி, அனிதா, சனம் ஷெட்டிக்குத் தான் இறுதிச்சுற்றுக்கு வர மற்ற போட்டியாளர்களை விட அதிக தகுதிகள் உள்ளன என்றும் சுரேஷ் தாத்தாவும் அதற்கு தகுதியானவர் தான் என்றும், ஆனால், மக்கள் ஓட்டு, மக்கள் தீர்ப்பு என ஆஜீத், கேபி, ஷிவானி, சோம் உள்ளிட்டவர்களை கடைசி வரைக்கும் கொண்டு வந்ததே பித்தலாட்டம் தான் என்கின்றனர்.

பொறாமையின் உச்சம்

பொறாமையின் உச்சம்

அன்பு கேங் வந்த போதும், போஷ் கேங் வந்த போதும் நல்லா புரமோட் பண்ணிய விஜய் டிவி இவங்க மூன்று பேர் காட்சிகளை கட் பண்ணுவது பொறாமையின் உச்சம் என்றும், இன்றைய மூன்று புரமோவிலும் பாலாவை புரமோட் பண்றாங்க, ஷோ ஃபுல்லா ரியோவையும் அர்ச்சனாவையும் தான் காட்றாங்க, நிச்சயம் ஆரிக்கு டைட்டில் கொடுக்க மாட்டாங்க என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X