பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்ட் என்ட்ரியாகிறாரா சனம்? நம்பர் நாட் ரீச்சபிள்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி வைல்டு கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. மாடலாகவும் நடிகையாகவும் உள்ள சனம் ஷெட்டி 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாளில் இருந்து தினமும் ஒரு பிரச்சனையில் சிக்கி வந்தார். சக போட்டியாளர்களான சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பாலாஜி ஆகியோருடன் அவருக்கு நான்சிங்காகவே இருந்தது.

அவனே இவனே..

அவனே இவனே..

சனம் ஷெட்டி நாடா காடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவனே இவனே என்றும் வாடா போடா என்றும் பேசினார்.

கதறி அழுத சுரேஷ்

கதறி அழுத சுரேஷ்

இதனால் சனம் ஷெட்டியை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சனம் ஷெட்டி பேசிய பேச்சால் என்னை வெளியேற்றுங்கள் பிக்பாஸ் என கதறி அழுதார் சுரேஷ் சக்கரவர்த்தி.

எப்போது வெளியேறுவார்?

எப்போது வெளியேறுவார்?

அதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு வெறுப்பை வரவைக்கும் வகையிலேயே நடந்து கொண்டார் சனம் ஷெட்டி. இதனால் அவர் எப்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என கெஞ்சாத குறையாக கேட்டு வந்தனர் ரசிகர்கள்.

தறுதலை என்றார்..

தறுதலை என்றார்..

ஆனால் பாலாஜி சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகி பட்டத்தை பெற்றார் என்று கூறியதும் தறுதலை என்று பேசியதும் ரசிகர்களை சனம் ஷெட்டிக்கு ஆதராவாய் திருப்பியது. தொடர்ந்து சனம் ஷெட்டி, டாஸ்க்குகளை சிறப்பாக செய்து வந்தார்.

எவிக்ட்டான சனம்

எவிக்ட்டான சனம்

எந்த குரூப்பிலும் சேரமால் தனியாளாக அவர் விளையாடியது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சனம் ஷெட்டி. அவரது எவிக்ஷன் ரசிகர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸ்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

மனசே இல்லாமல் போனார்

மனசே இல்லாமல் போனார்

மனசே இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சனம் ஷெட்டி. மேலும் வார்த்தைக்கு வார்த்தை பாலாஜியிடம் நீங்கள்தான் போக வேண்டியது, உங்களுக்கு பதில் நான் போகிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார்.

வைரல் இன்விடேஷன்

வைரல் இன்விடேஷன்

இந்நிலையில் சனம் ஷெட்டி வரும் 12 ஆம் தேதி நடைபெறும் ஈவன்ட் ஒன்றில் பங்கேற்க உள்ளதாகவும் அதற்காகதான் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் பரவின. மேலும் அதற்கான இன்விடேஷனும் வைரலானது.

வைல்டு கார்ட் என்ட்ரி

வைல்டு கார்ட் என்ட்ரி

தற்போது சனம் ஷெட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சனம் ஷெட்டியின் மொபைல் நம்பர் இன்னமும் நாட் ரீச்சபிளிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழையலாம் என்று கூறப்படுகிறது.

நம்பர் நாட் ரீச்சபிள்

நம்பர் நாட் ரீச்சபிள்

அவர் நம்பர் நாட் ரீச்சபிளில் இருப்பதை சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிகை வனிதாவும் உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பாக டிவிட்டியுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டிக்கு தான் கால் செய்ய முயற்சித்ததாகவும் ஆனால் அவரது நம்பர் நாட் ரீச்சபிளில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வனிதா தகவல்

வனிதா தகவல்

அதற்கு நிச்சயம் வேலிடான காரணம் இருக்கும் என்றும் கூறியுள்ளர். மேலும் நிச்சயம் நீ ரீராக் செய்வாய் சனம்.. ஆல் த பெஸ்ட் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் வனிதாவும் சனம் ஷெட்டியின் நம்பர் நாட் ரீச்சபிளில் உள்ள அவர் வைல்ட கார்டாக உள்ளே போக அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

மீண்டும் குவாரண்டைன்

மீண்டும் குவாரண்டைன்

சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகதான் சனம் ஷெட்டியை மீண்டும் நிகழ்ச்சி குழு குவாரண்டைனில் வைத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X