உனக்கு மனநலம் சரியில்லை.. டாக்டரை போய் பாரு.. அப்புறம் பேசு.. சனம் ஷெட்டியை காயப்படுத்திய அபிராமி!
Recommended Video
சென்னை: தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பேசியது மனதை ரொம்பவே பாதித்துவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார் தர்ஷன். மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார் தர்ஷன்.
அவர்களின் காதல் விவகாரம் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் ஷெரினுடன் நெருக்கமாக இருந்தபோது தெரியவந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.

ஏமாற்றிவிட்டார்
இந்நிலையில் சனம் ஷெட்டி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக தன்னுடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நைட் பார்ட்டி
இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், சனம் ஷெட்டிதான் தன்னை மிரட்டினார் என்றும் அவர்தான் தனக்கு டார்ச்சர் கொடுத்தார் என்றும் கூறினார். மேலும் முன்னாள் காதலருடன் இரவு பார்ட்டி பண்ணினார் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். மேலும் சனம் கூறிய குற்றச்சாட்டுக்களையும் மறுத்தார்.

மலேசிய நிகழ்ச்சி
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சனம் ஷெட்டி தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார். அதாவது, மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக தர்ஷனுடன் தன்னையும் அழைத்திருந்தனர் என்றும், அப்போது தர்ஷன் மற்றும் அபிராமி இருவரும் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது தர்ஷனிடம் தான் பேச முயன்றதாக கூறினார்.

தர்ஷனிடம் பேசக்கூடாது
ஆனால், அபிராமி தர்ஷனிடம் தன்னை பேசவிடவே இல்லை என்றும் ஏன் தர்ஷனை டார்ச்சர் செய்கிறாய் என்ற ரீதியில் தன்னை கேட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் மட்டும் பேசிக்கொண்டே இருந்தார்கள் என்றும் தன்னிடம் தர்ஷன் பேசக்கூடாது என்பதை போல அபிராமி நடந்துக்கொண்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

மனநலம் சரியில்லை
அப்போது அபிராமியிடம் தான் உன்னை ஒரு தோழியாக நினைத்தேன் ஆனால் நீ உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், அவரிடம் பேசாமல் என்னை தடுப்பது தவறு இல்லையா? என்று கேட்டதற்கு அபிராமி உனக்கு மனநலம் சரியில்லை என்று கூறினார். அதோடு நிறுத்தாமல் நீ ஒரு மருத்துவரை போய் பார், அதன்பிறகு வந்து அவனிடம் பேசு என்று அபிராமி கூறியதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முகென் மீது காதல்
மேலும் அபிராமி பேசிய அந்த வார்த்தைகளை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே கவினை காதலிப்பதாக கூறினார் அபிராமி. கவின் அபிராமியின் காதலை ஏற்க மறுத்ததால் முகெனிடம் நெருங்கி பழகிய அவர், பின்னர் அவரை காதலிப்பதாக சுற்றி சுற்றி வந்தார்.

அபிக்கு கவுன்சிலிங்
முகென் தனக்கு வெளியே காதலி காத்துக்கொண்டு இருப்பதாக கூறியும் விடாமல் விரட்டி விரட்டி காதலித்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நகத்தால் தன்னை தானே பிராண்டிக் கொண்டதாகவும் இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவருக்கு பிக்பாஸ் வீட்டில் மன நல மருத்துவர் கவுன்சிலிங் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











