கதம்.. கதம்.. பாபா முத்திரையை காட்டி செம போஸ் கொடுத்த சனம் ஷெட்டி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டியின் ஜிம் செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில், காதலர் தினத்தை தனது புதிய காதலருடன் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டும் பரபரப்பை கிளப்பினார்.

அதிருப்தி
ரம்யா பாண்டியனுக்கு இணையாக பிக் பாஸ் வீட்டில் கடும் போட்டி கொடுத்து வந்த பெண் போட்டியாளரான சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிரடியாக சனம் ஷெட்டியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய நிலையில், ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.

சந்தேகமே வந்துடுச்சு
சுரேஷ் சக்கரவர்த்தியை போலவே சனம் ஷெட்டியையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றிய நிலையில், அடுத்ததாக ஆரியையும் இப்படியே ஏதாவது பிளான் பண்ணி விஜய் டிவி வெளியேற்றி விடும் என்கிற சந்தேகம் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு இறுதி வரை இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் மக்கள் மனதில் சனம் ஷெட்டி மக்கள் தலைவியாக இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

யாரு அந்த மோனே
காதலர் தினத்தை முன்னிட்டு கேண்டில் லைட் டின்னருக்கு புதிய காதலருடன் சென்ற சனம் ஷெட்டி, காதலர் யார் என்பதை அறிமுகப்படுத்தாமல் அவரது கையை மட்டும் பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, மோனே என அவர் ஒரு கேரள இளைஞர் என்பதை மட்டும் வெளிப்படுத்த, யாரு அந்த மோனே என சனம் ஷெட்டியை தொடர்ந்து நச்சரித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

கதம் கதம்
இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து முடித்து விட்டு எடுத்த மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் சனம் ஷெட்டி. கதம் கதம் என பாபா முத்திரையை எல்லாம் காட்டி சனம் கொடுத்திருக்கும் போஸ் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கருப்பு வைரம்
கருப்பு நிற டிசர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு செம க்யூட்டாக வொர்க்கவுட் செய்த பிறகு எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சனம் ஷெட்டியை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். கருப்பு வைரம் என்றும், ரொம்ப அழகா இருக்கீங்க என்றும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











