twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு?

    |

    சென்னை: அன்பு கேங் என்ன பேசுகிறது என்பதை ஆரி காது கொடுத்து கேட்காத நிலையில், ஆரி, சனம் பேசிக் கொண்டிருக்கும் போது மட்டும் ஏன் ரியோ மூக்கை நுழைக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ஒட்டுமொத்த அன்பு கேங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் போது சந்தோஷத்தில் இல்லாமல், டைட்டிலை பற்றிய கவலையிலேயே ரியோ இருப்பது போலவே தெரிகிறது.

    ஆன் பாயின்ட்டா பேசுறீங்க என சனம் ஷெட்டி ஆரியை பாராட்டியது ஹைலைட்.

    ரொம்பவே போரிங்

    ரொம்பவே போரிங்

    கிராண்ட் ஃபினாலே வாரத்துக்கான பிக் பாஸ் எபிசோடுகள் மாதிரியே இல்லை. மொத்தமாகவே டோட்டல் ஷோவும் போரடிக்கிறது. ஓரிரு காட்சிகளை நம்பி எப்படித்தான் எடிட்டர் ஒரு மணி நேர புரோகிராமை போடுகிறார் என்றும், ஒரு மணி நேரத்துக்கு கூடவா 24 மணி நேரத்தில் கன்டென்ட் கிடைக்கல என்கிற கேள்வியும் தானாகவே எழுகிறது.

    பின்னாலே சுற்றும் ரியோ

    பின்னாலே சுற்றும் ரியோ

    ஆரி, சனம் ஷெட்டி பேசிக் கொண்டிருக்கும் போது சுசித்ராவும் தனது கருத்துக்களை எடுத்து முன் வைத்தார். சிலர் நிச்சயம் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள், அது உண்மை தான் என சொல்ல, உடனே உள்ளே புகுந்த ரியோ, அதை மறுத்து மீண்டும் ஆரியிடம் வம்புக்கு செல்வது போலவே பேசுகிறார்.

    உண்மையாகவே நினைச்சா

    உண்மையாகவே நினைச்சா

    ஆரியை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தால், அவரிடம் நீங்கள் பேசும் தொனியே வேற மாதிரி இருந்திருக்கும். அவரை கார்னர் செய்து குத்திப் பார்ப்பது போலவே பேசுறீங்க ரியோ, ஏன் இந்த வேலை ஃப்ரீயா இருங்க, அன்பு கேங் இருந்தும் நீங்க ஏன் கவலையா இருக்கீங்க, மைண்ட் முழுவதும் டைட்டில் தான் குறியாக இருக்கு என்பது ஓப்பனா தெரியுது என ரியோவை விளாசி வருகின்றனர்.

    ஆன் பாயின்ட்

    ஆன் பாயின்ட்

    பின்னர் மீண்டும் கிச்சன் ஏரியாவில் ஆரியிடம் பேசிய சனம் ஷெட்டி, நீங்க ஆன் பாயின்ட்டா பேசுறீங்க, சூப்பர் பிரதர் என்று மட்டுமே சொன்னார். உங்கள் விஷயத்துல எல்லாமே சரின்னு சொல்ல வரல.. ஆனால், சில விஷயத்துல நீங்க பேசுறது ஆன் பாயின்ட்டா இருக்கு என ஆரிக்கு சப்போர்ட் செய்தார்.

    English summary
    Sanam Shetty praises Aari for his perfect talking inside the Bigg Boss house. Rio Raj unwontedly interfering into their conversation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X