இன்னா மயிலு உரசிகினு.. ஃபிளையிங் கிஸுடன் சனம் ஷெட்டி வெளியிட்ட வேற லெவல் வீடியோ!
சென்னை: நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வேற வெலவல் புகழ்ந்து வருகின்றனர்.
பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார்.
இருந்த போதும் சனம் ஷெட்டிக்கு இதுவரை எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சனம்

ரசிகர்கள் மத்தியில்..
இதில் ஆரம்பத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து வந்தார் சனம். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்தபோதும் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

ரசிகர்களை உற்சாகம்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சனம் ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சனம் ஷெட்டி ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று ரசிகர்ளை குஷிப்படுத்தியுள்ளது.

இன்னா மயிலு சிரிச்சுக்கினு
அதாவது கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஆகியோர் இன்னா மயிலு சிரிச்சுக்கினு என்ற பாடலை பாடியுள்ளனர். படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபிளையிங் கிஸ்
இந்தப் பாடலுக்கு டப்ஸ் மேஷ் செய்துள்ளார் சனம் ஷெட்டி. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை கட்டி ஆட்டம் போட்டுள்ளர் சனம் ஷெட்டி. இறுதியாக ஃபிளையிங் கிஸ் கொடுக்கும் சனம் ஷெட்டி அந்த வீடியோவுக்கு ரீல்ஸ் கேட்டவங்களுக்கு என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தலைவி இறங்கிட்டாங்களே
சனம் ஷெட்டியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவல் தலைவி என புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலர் அடடே தலைவி இறங்கிட்டாங்களே என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். சனம் ஷெட்டியின் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











