சுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல!

சென்னை: சுரேஷை வாடா போடா என திட்டியதற்காக கமலிடம் நடிகை சனம் ஷெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த நாடா காடா டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்தியின் செங்கோல் தனது நெற்றியில் பட்டதற்காக சனம் ஷெட்டி ஆவேசமானார்.

ஒரு இன்ச் கீழே பட்டிருந்தால் என் கண்ணே போயிருக்கும் அவன் கொடுப்பானா என்று கேட்டு விளாசி விட்டார்.

தகாத வார்த்தைகள்

தகாத வார்த்தைகள்

தெரியாமல் செய்துவிட்டேன் என்று சுரேஷ் கூறிய பிறகும் கூட, அவரை விடாமல் வெளியே வாடா, போடா என்றும் தகாத வார்த்தைகளால் பேசினார் சனம் ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்கள் சனம் ஷெட்டியை கடுமையாக விமர்சித்தனர்.

அகம் டிவி வழியே

அகம் டிவி வழியே

இதுகுறித்து கமல் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்றும் சனம் ஷெட்டியை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல்.

ஒப்புக்கொண்ட சுரேஷ்

ஒப்புக்கொண்ட சுரேஷ்

அப்போது டாஸ்க்கின் போது நடந்த விவகாரம் குறித்து விசாரித்தார் கமல். அப்போது தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி, கமலின் வேண்டுகோளுக்கிணங்க பிக்பாஸிடம் பேசியதை மீண்டும் பேசினார்.

இங்கீதம் இழந்த சனம்

இங்கீதம் இழந்த சனம்

அப்போது சனம் ஷெட்டியிடமும் நடந்த விவகாரம் குறித்து விசாரித்த கமல், என்ன பேச வேண்டும் என்ற இங்கீதத்தை இழந்து விட்டதாக கூறினார். மேலும் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் ஆனால் ஒரு மனிதருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்றார்.

மன்னிப்பு கேட்கவில்லை

மன்னிப்பு கேட்கவில்லை

இதனை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நான் பேசியதெல்லாம் தவறுதான் என்ற சனம் ஷெட்டி, அதற்காக வருத்தப்படுவதாகவும் கூறினார். தான் ஒரு குழந்தை போல கோபத்தில் நடந்து கொண்டதாக கூறினார். வார்த்தைக்கு வார்த்தை வருத்தம் தெரிவித்த சனம் ஷெட்டி ஒரு இடத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லை.

Recommended Video

Bigg Boss 4 Tamil | மனிதருக்கு மரியாதை குடுங்க • Sanam Suresh
மன்னிபே வரலையே

மன்னிபே வரலையே

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் குறைந்துவிடுவீர்களா என மீண்டும் விளாசி வருகின்றனர். கமல் முன்னிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் மன்னிப்பு கேட்ட நிலையில் சனம் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X