For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இது தேவையா உனக்கு...வீடியோ ஆதாரத்துடன் பாலாவின் முகமூடியை கிழித்த சனம் ஷெட்டி

  |

  சென்னை : நடிகை சனம் ஷெட்டி மீது பாலாஜி முருகதாஸ் வைத்த குற்றச்சாட்டிற்கு, வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பதிலளித்துள்ளார் சனம். இதற்காக அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

  பிக்பாஸ் சீசன் 4 ல், டுபாக்கூர் என பாலா சொன்ன ஒற்றை வார்த்தையில் ஆரம்பித்த பாலாஜி முருகதாஸ் - சனம் ஷெட்டி சண்டை, பிக்பாஸ் அல்டிமேட் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முடிவில்லாமல் போகும் இவர்களின் சண்டை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

  பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, பைனல்ஸ் வரை சென்று, ரன்னர் அப் வாங்கியவர் பாலாஜி முருகதாஸ். அதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் சனம் ஷெட்டி. இருவருமே மாடலிங் துறையில் இருந்தவர்கள். ஷோ ஆரம்ப சில நாட்களிலேயே மாடலிங் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் சனம் கலந்து கொண்ட அழகிப் போட்டி டுப்பாக்கூர் என கூறி பிரச்சனையை துவக்கினார் பாலா.

  ரஜினி 169வது படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் யார் தெரியுமா!ரஜினி 169வது படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் யார் தெரியுமா!

  சனம் மீது பாலா குற்றச்சாட்டு

  சனம் மீது பாலா குற்றச்சாட்டு

  இந்த பிரச்சனை சமாதானம் செய்து வைக்கப்பட்டாலும் அந்த சீசன் முழுவதும் இருவரும் இது தொடர்பாக மோதிக் கொண்டனர். அதோடு அந்த பிரச்சனை முடிந்து விட்டது என்றால் தற்போது சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் இதே பிரச்சனை தொடர்கிறது. பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பாலா, டெவில் -ஏஞ்சல் டாஸ்க்கின் போது, சனம் தனது வாழ்க்கையில் வந்த பேய் என மறைமுகமாக கூறினார். அதோடு சனம் தனது பெயர், வாழ்க்கை அனைத்தையும் கெடுத்து, தன்னை மோசமானவனாக சித்தரித்து விட்டார் என பேசினார்.

  ஆதாரத்தை வெளியிட்ட சனம்

  ஆதாரத்தை வெளியிட்ட சனம்

  இந்நிலையில் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள சனம், உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. சில போட்டியாளர்கள் என் மீது வைத்த தவறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எனக்கு நிறைய போன் கால்கள் வந்தன. அவர்களின் கேமை பாதிக்கும் என்பதால் தான் நான் இதுவரை ரியாக்ட் செய்யாமல் இருந்தேன். ஆனால் இன்று அது நேர்மையை கேள்வி கேட்பதாக மாறி விட்டது. என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் இதோ. நன்றி ஆரி ப்ரோ என குறிப்பிட்டுள்ளார்.

  நன்றி ஆரி ப்ரோ

  நன்றி ஆரி ப்ரோ

  அதோடு பிக்பாஸ் அல்டிமேட்டில் சனம் பற்றி பாலா பேசிய வீடியோ மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ல் பாலா பேசியது பற்றி சுரேஷ் சக்கரவர்த்தியிடம் ஆரி விளக்குவது போன்ற வீடியோ ஆகியவற்றை இணைத்து வெளியிட்டுள்ளார். அதில் ஆரி, தான் பேசியது தவறு தான் பாலாவே ஒப்புக் கொண்டதாகவும், அதனால் தான் அவனை மன்னிப்பு கேட்க சொல்லி தான் கூறியதாகவும் கூறுகிறார்.

  எனக்கு இதெற்கெல்லாம் நேரமில்லை

  எனக்கு இதெற்கெல்லாம் நேரமில்லை

  ட்விட்டரில் சனம் அளித்துள்ள விளக்கத்தில், முதலில் ஆரம்பித்தது அவர்கள் தான். எனக்கு சிம்பத்தியோ பப்ளிசிட்டியோ தேவையில்லை. யார் கேட்கிறார்களோ அவர்களிடம் தயவு செய்து இதை சொல்லுங்கள். எந்த ஆதரமும் இல்லாமல் தொடர்ந்து என் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால் என் பற்றிய விளக்கத்தை நான் கொடுக்கிறேன். தங்களின் கேமிற்காக வெளியில் இருப்பவர்கள் பற்றி எதுவும் தெரியாமல் குற்றம் சுமத்துவதை போட்டியாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். என் வாழ்க்கைக்காக நான் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களின் வாழ்க்கையையோ பெயரையோ கெடுப்பதற்கு எனக்கு நேரமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

  இனி யாரும் பேசச்கூடாது

  இனி யாரும் பேசச்கூடாது

  சொல்ல போனால் சில டைரக்டர்கள் என்னிடம் கேட்ட போது கூட அந்த நபருக்காக நான் ஆதரவாக தான் பேசி உள்ளேன். ஷோவில் அவர் பேசிய பல விஷயங்கள் பிடிக்காததால் அதை எதிர்த்து நான் நின்றுள்ளேன். ஆனால் வீட்டிற்குள் சரியாக என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்பது பற்றிய ஒளிபரப்பாததால் யாருக்கும் தெரியாது. அதனால் இனிமேலும் இது தொடர்பாக யாரும் என்னை குற்றம்சாட்டினால் நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன் என கோபமாக குறிப்பிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

  English summary
  Actress Sanam Shetty released video proof of Balaji Murugadoss's statement against her. In Bigg Boss's ultimate devil-angel task, Bala says Sanam as a demon in his life indirectly. Now, Sanam gives clarification as to what happened.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X