மக்கள் நாயகன் ஆரி.. பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட சனம் ஷெட்டி.. வேற ஒரு சர்ப்ரைஸும் இருக்கு!

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் பிறந்தநாள் காமன் டிபியை நடிகையும் சக போட்டியாளருமான சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.

ரெட்டச் சுழி படத்தில் நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ஆரி ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் மக்கள் செல்வாக்கையும் தட்டிச் சென்றார்.

ஆரிக்கு பர்த்டே

ஆரிக்கு பர்த்டே

பிக் பாஸ் டைட்டில் வின்னரான நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் வரும் பிப்., 12 தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. 1986ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பிறந்த நடிகர் ஆரி தனது 35வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஆரியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சனம் வெளியீடு

சனம் வெளியீடு

ஹீரோ, ஹீரோயின்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் சிடிபிக்களை ரசிகர்கள் வெளியிட்டு வரும் நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு அவரது ஆர்மியினர் பிறந்தநாள் காமன் டிபியை உருவாக்கி உள்ளனர். ஆரியின் நண்பரும் சக போட்டியாளருமான சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டுள்ளார்.

நல்ல நட்பு

நல்ல நட்பு

பிக் பாஸ் வீட்டில் ஆரிக்கு எதிராக பல போட்டியாளர்கள் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு ஆறுதலாக இருந்தது அனிதா சம்பத்தும், சனம் ஷெட்டியும் தான். ஆரி டைட்டில் ஜெயிக்க வேண்டும் என ரீ என்ட்ரியின் போது உள்ளே வந்த சனம் ஷெட்டி சொன்னது ஆரியின் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ரியா பிறந்தநாள்

ரியா பிறந்தநாள்

நேற்று ஆரியின் மகள் ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஆரி அர்ஜுனன் தனது வீட்டு பால்கனி தோட்டத்தில் விதை ஒன்றை நட வைத்து போட்டோ போட்டிருந்தார். அதன் பின்னர் இந்த சிடிபியை வெளியிட்ட சனம் ஷெட்டி, இரட்டை சந்தோஷம் என தனது பதிவில் குறிப்பிட்டு குட்டி ரியாவையும் வாழ்த்தினார்.

ஜோ மைக்கேலும்

ஜோ மைக்கேலும்

சனம் ஷெட்டியை போலவே ஜோ மைக்கேலும் ஆரியின் பிறந்தநாள் காமன் டிபியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ஆரிக்கு அட்வான்ஸாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆரியின் நல்ல கருத்துக்களை அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் கொண்டாட்டம்

நாளை மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. ஆரிக்கு விவசாயிகள் மற்றும் சக போட்டியாளர்கள் என அனைவரும் மரியாதை செலுத்தி வாழ்த்த உள்ளதையும் ஆரியின் பர்ஃபார்மன்ஸையும் பேச்சையும் கேட்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கைவசம்

கைவசம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே பல படங்களில் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், அலேகா, லாஸ்லியாவுடன் ஒரு படம், பகவான், போலீஸ் அதிகாரியாக ஒரு படம் என இந்த ஆண்டு அடுத்தடுத்து சினிமாவிலும் ஆரியின் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X