சனம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகி பட்டம் வாங்கினார்.. வைரலாகும் பாலாஜியின் அசிங்கமான கமெண்ட்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனையில் சனம் ஷெட்டிக்கு மிகவும் அசிங்கமான ஒரு கமெண்ட்டை பாலாஜி கூறியது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை காட்டிலும் சண்டைகளும் சர்ச்சைகளும் அதிகமாக உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் கொஞ்சம் கூட கண்ணியத்தை காக்கவில்லை.

போடா வாடா

போடா வாடா

ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசுவது கண்டப்படி திட்டி தீர்ப்பது, வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசுவது என படு மோசமாக நடந்து வருகிறார்கள். காடா நாடா டாஸ்க்கின் போது, வயதில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என்றும் அவனே இவனே என்றும் பேசினார் சனம் ஷெட்டி.

அறிவில்லையா?

அறிவில்லையா?

அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸும் சுரேஷ் சக்கரவர்த்தியை போயா வாயா என்றும் அறிவில்லையா என்றும் திட்டினார். இதற்காக இருவரையுமே கமல் இங்கீதம் இல்லை என விளாசிவிட்டார்.

வன்முறை கூடாது

வன்முறை கூடாது

அதோடு சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டுக்காக செய்தாலும் அதுபோன்ற பெண்கள் மீதான வன்முறை வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் கமல். இந்நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை பெரும் பூதாகரமாகியுள்ளது.

தறுதலை தறுதலை

தறுதலை தறுதலை

நேற்று முன்தினம் எபிசோடில் காட்டப்பட்டதின்படி பாலாஜி, சனம் ஷெட்டியை ஏய் தறுதலை தறுதலை என்று திரும்ப திரும்ப அழைத்தார். மேலும் நீ என்ன பெரிய இவளா என்றும் தகாத வார்த்தைகளால் பேசினார்.

பெரும் அதிர்வலைகள்

பெரும் அதிர்வலைகள்

சக போட்டியாளர்களான ஆரியும் அனிதாவும் எடுத்துக் கூறியும் ஆரியிடம் எகிறினார் பாலாஜி. தொடர்ந்து சனம் ஷெட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கேவலமான கமெண்ட்

கேவலமான கமெண்ட்

எப்படி ஒரு பெண் போட்டியாளரை தறுதலை என்று சொல்லலாம்? இழிவாக பேசலாம் என சமூக வலைதளங்களில் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் சனம் ஷெட்டி குறித்து அந்த சண்டையின் போது பாலாஜி பேசிய படு கேவலமான கமெண்ட் வைரலாகி பகீர் கிளப்பியுள்ளது.

அழகி பட்டத்துக்காக அட்ஜெஸ்ட்மென்ட்

அழகி பட்டத்துக்காக அட்ஜெஸ்ட்மென்ட்

அதாவது சனம் ஷெட்டி, மிஸ் சவுத் இந்தியா பீஜியன்டை, ஒருவருடன் அட்ஜெஸ்ட் செய்து படுக்கையை பகிர்ந்து தான் பெற்றார் என கூறியுள்ளார் பாலாஜி. இந்த விஷயத்தை நேற்றைய கோர்ட் டாஸ்க்கின் போது புகார் மனுவாக எழுதினார் சனம் ஷெட்டி.

சனம் கம்ப்ளையன்ட் லெட்டர்

சனம் கம்ப்ளையன்ட் லெட்டர்

புகார் மனுவில் சனம் ஷெட்டி எழுதியதன் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வருகிறது. அதில் இடம் பெற்றிருப்பதாவது, நான் மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அட்ஜெஸ்மென்ட் செய்தும் காம்ப்ரமைஸ் செய்தும்தான் பட்டத்தை வாங்கியதாக சில வார்தைகளை பயன்படுத்தினார்.

பெரும் குற்றச்சாட்டு

பெரும் குற்றச்சாட்டு

இதில் உண்மையில்லை, அடிப்படை ஆதாரமற்றது. என் நேர்மையின் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வைக்கப்பட்ட பெரும் குற்றச்சாட்டு என எழுதியிருந்தார். அந்த சம்பவங்கள் நிகழ்ச்சியில் காட்டப்படாத நிலையில் நேற்றைய முதல் புரமோவில் இடம்பெற்ற இந்த விஷயம் பெரும் வைரலானது.

புரமோ நீக்கம்

புரமோ நீக்கம்

அதனை தொடர்ந்து அந்த புரமோவை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து விஜய் டிவி நீக்கிவிட்டது. இருப்பினும் சனம் ஷெட்டியின் கடிதத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மக்களுக்கு தெரிய வேண்டும்

மக்களுக்கு தெரிய வேண்டும்

என்னதான் நடந்தது என்பதை இன்றைய எபிசோடிலாவது காட்டுங்கள். என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மூடி மறைத்த விஜய் டிவி

மூடி மறைத்த விஜய் டிவி

ஏற்கனவே சனம் பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் அழகிப்போட்டி என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் பாலாஜி முருகதாஸ். இந்நிலையில் சனம் ஷெட்டியை அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் பாலாஜி. அதனை ஒளிபரப்பாமல் மூடி மறைத்து விஜய் டிவியும் அவருக்கு ஆதரவாய் இருந்துள்ளது.

ரெட் கார்டு - பரபரப்பு

ரெட் கார்டு - பரபரப்பு

பெண் போட்டியாளரை இவ்வளவு இழிவாய் பேசிய பாலாஜி முருகதாஸை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் சனம் ஷெட்டியின் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X