அன்னைக்கு நைட் பார்ட்டில நடந்தது இதுதான்.. மனம் திறந்த நடிகை சனம் ஷெட்டியின் எக்ஸ் லவ்வர்!
Recommended Video
சென்னை: சனம் ஷெட்டியுடனான காதலை தர்ஷன் முறித்துக்கொண்ட நிலையில் நைட் பார்ட்டியில் நடந்தது குறித்து அவரது எக்ஸ் லவ்வர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மாடல் மற்றும் நடிகையான சனம் ஷெட்டி, தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மஹா படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் டைம் லைனில் இருந்து வருகின்றனர். தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி புகார் அளித்தார்.

முன்னாள் காதலர்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். ஆனால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, பிக்பாஸ் ரம்யா மற்றும் சத்யாவின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது நடந்த இரவு பார்ட்டியில் தனது முன்னாள் காதலருடன் பங்கேற்றதாக கூறினார்.

முடியாது
இரவு முழுக்க தனது முன்னாள் காதலருடன் பார்ட்டி பண்ணியிருக்கிறார். அதற்கான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. அதனை தேவைப்படும் போது போலீசாரிடம் காட்டுவேன் என கூறியிருந்தார். இவ்வளவு நடந்திருக்கு இதற்கு மேல் நான் எப்படி அவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

பார்த்தது உண்மைதான்
இந்நிலையில் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலரான அஜய் என்பவர் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, அந்த நைட் பார்ட்டியில் நானும் சனம் ஷெட்டியும் பார்த்துக்கொண்டது உண்மை தான் ஆனால் நாங்கள் பேசிக்கொள்ள வில்லை இது தான் அங்கு நடந்தது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை
பார்த்துக்கொண்டோமே தவிர ஒரு வார்த்தைக் கூட பேசிக்கொள்ளவில்லை என்றும் தெளிவாக கூறியிருக்கிறார். தர்ஷன் சொல்வது போல் தனியறையில் எல்லாம் இல்லை என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், இனியாவது உண்மையை புரிந்து கொண்டு தன்னை வளர்த்துவிட்ட சனம் ஷெட்டியுடன் மீண்டும் சேர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











