ரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை சனம் ஷெட்டி மீண்டும் ஆரியை பாராட்டி பதிவிட்டிருக்கும் டிவிட் வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் 105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவு பெற்றது.
இதில் ஆரி அர்ஜூனன் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

எல்லாவற்றிலும் தலையிடுவதாக..
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. மனதில் பட்டதை பட்டென கூறி, உண்மையாக விளையாடி வந்தார். அவ்வப்போது எல்லாவற்றிலும் தலையிடுவதாக விமர்சிக்கப்பட்டார்.

எதிர்பாராத எவிக்ஷன்
இருந்த போதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சனம் ஷெட்டி. தனித்துவமான போட்டியாளர்களை எல்லாம் வெளியேற்றுகிறார்கள் என்று விஜய் டிவியை விளாசினர் நெட்டிசன்கள்.

பின்னால் பேசவில்லை..
மேலும் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி ஆகிய மூன்று பேரும் நண்பர்களாக இருந்தனர். இதனால் சக போட்டியாளரான சம்யுக்தா அவர்களை ட்ரியோ என்று அழைத்து வந்தார். மூவருக்குள்ளும் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும் ஒருவர் குறித்து ஒருவர் பின்னால் பேசவில்லை.

தாங்களே வென்றதுபோல்
பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி ஆன போதும் கூட ஆரிக்காகதான் வந்தேன், ஆரிதான் வெல்ல வேண்டும் என்று கூறி வந்தார் சனம் ஷெட்டி. அதேபோல் ஆரி கப்பை வென்ற போதும் தாங்களே வென்றது போல் ரியாக்ட் செய்தனர் சனம் ஷெட்டியும் அனிதாவும்.

ஆரிக்கு சல்யூட்
அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஆரியின் வெற்றி உண்மையின் வெற்றி என புகழாரம் சூட்டியிருந்தார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ஆரிக்கு சல்யூட் அடித்துள்ளார் சனம் ஷெட்டி.

உண்மையா சின்னம்
அதாவது, ரியல் லைஃப் ஹீரோ ஆரி அர்ஜுனனுக்கு என்னுடைய சல்யூட்.. ஆரி பிரதர் நாம் இருவரும் உண்மைக்காக நின்றோம்.. நீங்கள் உண்மை மற்றும் தீர்மானத்தின் உண்மையான சின்னம்.. ஹேட்ஸ் ஆஃப்.. உங்களை அறிவது எங்களுக்கு கவுரவம்.. அதிக வெற்றிகளுடன் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.. இவ்வாறு சனம் ஷெட்டி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குவியும் லைக்ஸ்
மேலும் ஆரியும் சனம் ஷெட்டியும் சேர்ந்து நின்று சல்யூட் செய்யும் போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். சனம்மின் இந்த பதிவு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











