அடிச்சது தப்பு தான்.. ஆனால், பிரதீப் ஆண்டனி ரசிகர்களை அசிங்கப்படுத்தாதீங்க வனிதா.. சனம் ட்வீட்!
சென்னை: பிரதீப் ஆண்டனி ரசிகர் ஒருவர் தன்னை இரவில் கொடூரமாக தாக்கியதாக நடிகை வனிதா விஜயகுமார் போட்டோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்நிலையில், வனிதா விஜயகுமாரை போலவே இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி வனிதாவை அடித்தவருக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதே நேரத்தில் பிரதீப் ஆண்டனிக்கு தொடர்ந்து சப்போர்ட்டாக பேசி வரும் சனம் ஷெட்டி யாரோ ஒரு கொடூரன் செஞ்ச தப்புக்காக மொத்த பழியையும் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் மீது போடக் கூடாது என்றும் ட்வீட் போட்டுள்ளார்.
வீங்கிய முகம்: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த ஷோவையும் கலக்கிய வத்திக்குச்சி வனிதா விஜயகுமார் பல சீசன்களாக பிக் பாஸ் விமர்சகராக மாறி தனது கருத்துக்களை சொல்லி வருகிறார். இந்த சீசனில் அவரது மகள் ஜோவிகா உள்ளே உள்ள நிலையில், அவருக்கு சாதகமாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறார் வனிதா என்கிற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், ரெட் கார்டு ஏன் கொடுத்தீங்க என பல வாரங்கள் கழித்து பிரதீப் ரசிகர் ஒருவர் வனிதாவை முகத்திலேயே குத்தி வீங்க வைத்த புகைப்படத்தை பார்த்தாலே நெஞ்சு பதறுகிறது.
பிரதீப் ரசிகர் தான்: தன்னை இந்த அளவுக்கு கொடூரமாக தாக்கியது பிரதீப் ஆண்டனி ரசிகர் தான் என வனிதா விஜயகுமார் குறிப்பிட்டு சொல்லி உள்ள நிலையில், பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் வனிதாவுக்காக இரக்கப்படுவது போல எல்லாம் தெரியவில்லை. வேறு ஏதோ பிரச்சனையில் அடி வாங்கி விட்டு வனிதா பிரதீப் மீது வன்மத்தை கக்குகிறார் என ஹேட்ரட்டை பரப்பி வருகின்றனர்.
சனம் ஷெட்டி கண்டனம்: நடிகை வனிதா விஜயகுமாரை கொடூரமாக தாக்கியதை அறிந்த சனம் ஷெட்டி இந்த மோசமான கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் தானும் இதுபோல பல சங்கடங்களை சந்தித்து தான் இங்கே வந்துள்ளேன் என பதிவிட்ட அவர், அதற்காக ஒட்டுமொத்த பிரதீப் ஆண்டனி ரசிகர்களும் இப்படித்தான் என குறை சொல்லக் கூடாது என வனிதாவுக்கு எதிராகவும் கருத்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











