சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!

சென்னை: சனம் ஷெட்டி நடித்துள்ள வெப் சீரிஸ் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மாடலான சனம் ஷெட்டி 2012ஆம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

போஸ்ட் புரடெக்ஷன்

போஸ்ட் புரடெக்ஷன்

தற்போது மகா, எதிர் வினையாற்று மற்றும் பார்த்திபன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் எதிர் வினையாற்று மற்றும் பார்த்திபன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தைரியமாக குரல்

தைரியமாக குரல்

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் தன்னுடைய கருத்து எதுவாக இருந்தாலும் ரொம்பவே தீர்மானமாக இருந்தார். மேலும் எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக குரல் கொடுத்து வந்தார்.

வெளியேறிய சனம்

வெளியேறிய சனம்

ஃபைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் கடுப்பான சனம் ஷெட்டியின் ரசிகர்கள் விஜய் டிவியை விளாசி தள்ளினர்.

வாழ்த்து கூறிய சனம்

வாழ்த்து கூறிய சனம்


சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சனம் ஷெட்டி பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து தன்னுடைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட சக போட்டியாளர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வாழ்த்து கூறி வந்தார்.

குருதிக்களம் வெப் சீரிஸ்

குருதிக்களம் வெப் சீரிஸ்

இந்நிலையில் சனம் ஷெட்டி டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் தகவல் அவரது ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது. அதாவது, சனம் ஷெட்டி நடித்துள்ள குருதிக்களம் வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

அதன்படி, எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி பிளாட்ஃபார்மில் ஜனவரி 22ஆம் தேதியான நாளை சனம் ஷெட்டியின் குருதிக்களம் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது. மொத்த டீம்முக்கும் நன்றி.. குட்டி பத்மினி மேம்க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.. மேலும் வெப் சீரிஸின் ட்ரெயிலரை பார்த்து விட்டு உங்களுடைய மதிப்பு மிக்க கமெண்டுகளை கூறுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஒரிஜினல் குரல்..

ஒரிஜினல் குரல்..

இதனை பார்த்த பலரும் உங்களின் டப்பிங் குரலைவிடவும் ஒரிஜினல் குரல்தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது. நிச்சயமாக ஜனவரி 22ஆம் தேதி இந்த வெப் சீரிஸை பார்ப்போம். உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்.. சக்சஸ் ஆன் தி வே என்று தெரிவித்து வருகின்றனர்.

காத்துக் கொண்டிருக்கிறோம்

காத்துக் கொண்டிருக்கிறோம்

இன்னும் பல நெட்டிசன்கள் சனம் ஷெட்டிக்கு ஆல் த பெஸ்ட் கூறியுள்ளனர். மேலும் இனி எல்லாமே உங்களுக்கு நல்லதாகத்தான் நடக்கும்.. உங்களின் வெப் சீரிஸைக் காண நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X