என் பெயரை கெடுத்த ’டெமன்’ .. சனம் ஷெட்டியை மீண்டும் வம்பிழுத்த பாலா.. சனம் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடக்கிறதா இல்லை நடந்து முடிந்த 5 சீசன்களின் ரீகேப் நடக்கிறதா என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Recommended Video

என் பெயரை கெடுத்த ’டெமன்’ .. சனம் ஷெட்டியை மீண்டும் வம்பிழுத்த பாலா.. சனம் என்ன சொன்னார் தெரியுமா?

அனிதா சம்பத் 4வது சீசன் புராணத்தை இதுவரை பாடி வந்த நிலையில், தற்போது பாலாஜி முருகதாஸும் அதே 4வது சீசனில் அவருக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே நடந்த அந்த பிரச்சனையை தூசு தட்டி உள்ளார்.

ஒரு டெமன் பெண்மணியால் தனது பெயர் டேமேஜ் ஆனது என மீண்டும் சனம் ஷெட்டியை அவர் வம்பிழுக்க அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி.

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை

அழகி போட்டிகளில் மகுடத்தை சூடிக் கொள்ள சனம் ஷெட்டி சில பல அட்ஜெஸ்ட்மென்ட் செய்தார் என பாலாஜி முருகதாஸ் கூறியதாக சனம் ஷெட்டி எழுதிய புகார் கடிதத்தை புரமோவில் போட்டு பின்னர் டெலிட் செய்தனர். பாலாஜி முருகதாஸுக்கு இந்த விவாகாரத்திற்காக ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என அப்போது ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், அவருக்கு விஜய் டிவி கொடுத்ததோ ரன்னர் அப்.

பெயர் டேமேஜ் ஆகிடுச்சு

பெயர் டேமேஜ் ஆகிடுச்சு

அந்த பழைய பஞ்சாயத்தை ரசிகர்களே மறந்து விட்டு பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலா விளையாடி வருவதை பார்த்து ரசித்து வரும் நிலையில், தன்னுடைய பெயரே அந்த ஒரு விஷயத்தால் கெட்டுப்போச்சு என பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் குப்பையை கிளற பிரச்சனை வெடித்துள்ளது

சாத்தான் சனம்

சாத்தான் சனம்

பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் ஏஞ்சல்ஸ் vs டெமன்ஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையை கெடுத்த டெமன் யார் என்பது குறித்து பேசிய பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டை பரப்பினார் என்றும் அந்த பெண்மணி தான் டெமன் என்றும் கூறியுள்ளார்.

சனம் ட்வீட்

சனம் ட்வீட்

இதுவரை இந்த பிரச்சனையை பொறுமையாக கையாண்டு வந்த சனம் ஷெட்டி தனது பெயர் மீண்டும் இழுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்பதற்காக, பாலாஜி முருகதாஸ் தற்போது பேசிய வீடியோவும், ஆரி அர்ஜுனன் பாலா அந்த வார்த்தையை பேசியதாக சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இரவு உரையாடிய சீசன் 4 காட்சிகளையும் பதிவிட்டு, பாலா தான் பொய் சொல்கிறார் என்பதை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த சீன்

அந்த சீன்

சனம் ஷெட்டியை டுபாக்கூர் என பாலா சொன்ன சீனை காட்டிய பிக் பாஸ் டீம், சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்தார் என பாலாஜி முருகதாஸ் பேசிய காட்சிகளை வெளியிடாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாலா அப்படி பேசினாரா? இல்லை சனம் பாலா தன்னை அப்படி பேசினார் என்று சொன்னாரா? ஆரி கேட்டது என்ன? ஆரி பாலாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லி பேசிய காட்சிகள் வெளியானாதால் தான் இதில் யார் பக்கம் நியாயம் இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பாலா மாறவில்லை

பாலா மாறவில்லை

தன்னைப் பற்றிய மக்களின் கருத்தை மாற்ற வேண்டும் என மீண்டும் பாலா அந்த பழைய விஷயத்தை பற்றி பேசி மேலும், அசிங்கப்பட்டுக் கொள்கிறார் என்றும் அதை கடந்து அவர் தனது கேமில் கவனம் செலுத்தினாலே இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் டைட்டில் வெல்லலாம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X