படுக்கத்தான் கூப்பிடுறாங்க.. ’பேட் கேர்ள்’ பேட் எக்ஸாம்பிள்.. கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியான நிலையில், அந்த படத்தை வரவிடாமல் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் என இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் நடைபெற்ற பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் புலம்பி பேசியிருந்தார். வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றிமாறனுக்கு பேட் கேர்ள் படத்தின் மூலம் கடுமையான கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு மக்கள் நாயகி என்கிற பட்டத்தை பெற்ற சனம் ஷெட்டி சமீபத்தில் நடைபெற்ற தனது பட பூஜை நிகழ்ச்சியில் பேட் கேர்ள் படம் குறித்து ஆவேசமாக பேசிய காட்சிகளை ஷேர் செய்து தற்போது ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஏகப்பட்ட பாலியல் தொல்லை பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பேட் கேர்ள் படம் போல்டான படமில்லை. இதுவொரு பேட் எக்ஸாம்பிள் படம் என வெளுத்து வாங்கியுள்ளார்.
தவறான உதாரணம்: பெண்கள் ஆபாசமாக போஸ் கொடுப்பதை போல்ட் என சொல்வதை ஏற்கனவே சில நடிகைகள் கண்டித்துள்ளனர். அமலா பாலின் ஆடை படத்தை பிக் பாஸ் பிரபலமான விசித்ரா அதுவொரு போல்டான படமா? இல்லை தவறான முன் உதாரணம் என பேட்டியொன்றில் பேசியுள்ளார். அதே போல தற்போது நடிகை சனம் ஷெட்டி பேட் கேர்ள் படத்தின் டீசர் போல்டான டீசர் இல்லை என்றும் அதுவொரு பேட் எக்ஸாம்பிள் என வெளுத்து வாங்கியுள்ளார்.
படுக்கத்தான் கூப்பிடுறாங்க: சினிமாவில் நடிகைகளை படம் நடிக்க எங்க கூப்பிடுறாங்க, பலரும் படுக்கத்தான் கூப்பிடுறாங்க. இங்கே உள்ள இந்த மோசமான விஷயத்தை எல்லாம் முதலில் மாற்றாமல் தேவையில்லாமல் இளம் பெண்களை கெடுக்கும் விதத்தில் படங்களை எடுப்பது ஏன் என்று தெரியவில்லை. அதை பல பெரிய பிரபலங்கள் ஆதரிப்பது தான் நிஜமாவே ஷாக்கிங்காக உள்ளது என சனம் ஷெட்டி கொந்தளித்து பேசியுள்ளார்.
பெண்ணுரிமை இதுவல்ல: தம் அடிப்பது, சரக்கடிப்பது, இஷ்டத்துக்கு செக்ஸ் வைத்துக் கொள்வது தான் பெண்ணுரிமை என்று தவறாக காட்ட முயற்சிப்பது எல்லாம் பெண்ணுரிமை கிடையாது என்றும் சுதந்திரத்தை தவறாக பெண்கள் பயன்படுத்தக் கூடாது. அதுவும் குறிப்பாக மைனர் பெண்கள் மீது அதனை திணிக்கும் இதுபோன்ற படங்களை ஆதரிக்கவே கூடாது என பதிவிட்டுள்ளார். இது சட்டப்படியும், மனசாட்சிபடியும் மருத்துவ ரீதியாகவும் தவறான ஒரு விஷயம் என தனது கருத்துக்களை அடுக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











