கமல் பெயரை காப்பாத்த மட்டும் 5 குறும்படம்.. பிக் பாஸுக்கு லாயக்கே இல்லை.. நடிகை விளாசல்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் கிராண்ட் ஃபினாலேவை நெருங்க உள்ளது. இந்நிலையில், இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 2 பேர் எவிக்ட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த எபிசோடில் கமல்ஹாசன் அர்ச்சனாவிடம் நடந்துக் கொண்டது சரியே கிடையாது என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி விளாசி உள்ளார்.
இந்த சீசனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கமலை முன்னாள் போட்டியாளர்களும், ரசிகர்களும் கழுவி ஊற்றி வருகின்றனர். கமல்ஹாசனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணி போர் அடித்து விட்டது. அவருக்கே இந்த சீசன் போட்டியாளர்களை தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றும் மாயா, விசித்ரா உள்ளிட்டோருக்கு மட்டுமே சப்போர்ட் செய்து பேசி வருகிறார் என குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

டபுள் எவிக்ஷன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அடிக்கடி டபுள் எவிக்ஷன்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வாரமும் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. வினுஷா விவகாரத்திலேயே நிக்சன் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் ஐஷுவை வெளியேற்றி விட்டு மிக்ஜாம் புயலை வைத்து நிக்சனை மீண்டும் பிக் பாஸ் காப்பாற்றிய நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.
மணிக்கு நிம்மதி: இதுவரை மணியை விடாமல் துரத்திக் கொண்டிருந்த சின்னத்திரை நடிகை ரவீனா தாஹாவும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றார் என தகவல்கள் கசிந்துள்ளன. சீக்கிரமே கிராண்ட் ஃபினாலேவை வைத்து எல்லாரையும் அனுப்பிடுங்க என ரசிகர்கள் பேசி வருகின்றனர். ரவீனா வெளியேறிய நிலையில், மணி இனிமேலாவது தனது விளையாட்டில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனாவுக்கு ஆப்பு: விசித்ரா அல்லது மாயா இருவரில் ஒருவர் தான் இந்த சீசன் டைட்டிலை வெல்லப் போகிறவர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் டீமும் அதை நோக்கியே நிகழ்ச்சியை கொண்டு செல்வது போலத் தெரிகிறது. இடையே வைல்டு கார்டாக உள்ளே நுழைந்து ஸ்கோர் செய்த அர்ச்சனாவை தற்போது ஆஃப் செய்ய கமலே களமிறங்கி விட்டாரா என்கிற கேள்விகளை சனம் ஷெட்டி எழுப்பி உள்ளார்.
கமலுக்கு மட்டும் 5 குறும்படம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் போடும் குறும்படங்கள் தான் ஹைலைட்டாக இருந்து வந்த நிலையில், இந்த சீசனில் கமல் தனது பெயரை பிரதீப் ஆண்டனி விஷயத்தில் காப்பாற்றிக் கொள்ள 5 குறும்படங்கள் போட்டார். விசித்ரா மற்றும் அர்ச்சனா இடையேயான பஞ்சாயத்தில் ஒரு குறும்படம் கூட போடாமல் புரிஞ்சிடுச்சா விளக்கியது என பேசி வெறுப்பேற்றி வருகிறார் என சனம் ஷெட்டி விளாசி உள்ளார்.
தகுதியே இல்லை: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தகுதியை இந்த சீசனில் கமல் இழந்து விட்டார் என்றும் பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் தப்பான தீர்ப்பு வழங்கியது. அதனை சமாளிக்கவே பல வாரங்களை வீணடித்தது. கடைசி வரை மாயாவுக்கு சப்போர்ட்டாக ஒருதலை பட்சமாக நடந்து வருகிறார் என எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











