பிக் பாஸ் வீட்ல பசங்களுக்குத்தான் பாதுகாப்பில்லை.. மாயா, பூர்ணிமா பண்ணும் வேலை.. சனம் ஷெட்டி பகீர்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கடந்த வாரம் சில போட்டியாளர்கள் கொந்தளித்த நிலையில், தொகுப்பாளர் கமல்ஹாசன் அதிரடியாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டிலும், நாட்டிலும் பெண்கள் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம் என பஞ்ச் பேசி ஒரு வாரமாக சோஷியல் மீடியாவில் வாங்கிக் கட்டி வருகிறார்.

பிரதீப் ஆண்டனியை பிளான் பண்ணி வெளியேற்றிய மாயா, பூர்ணிமா ரவி, ஜோவிகா, ரவீனா தாஹா மற்றும் ஐஷூ உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த ஒரு வாரத்தில் அப்படியே பல்டி அடித்து தங்களுக்கும் பிரதீப்புக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை எல்லாத்துக்கும் கமல் சார் தான் காரணம் என பிளேட்டை திருப்பி விட்டுள்ளனர்.

Sanam Shetty slams Men are really not safe in that Bigg Boss house


இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

பூர்ணிமா கிளம்புமா: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா ரவி தான் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு கிளம்பப் போகிறார் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஷூவை ஃப்ரீஸ் டாஸ்க் வரை வைத்து பிக் பாஸ் டிஆர்பி ஏற்றிக் கொள்ளும் என்றே தெரிகிறது. மாயாவுடன் சேர்ந்து காசிப் பேச ஆரம்பித்த அராத்திக்கு கடைசியாக மாயாவே பாயாசத்தை போட்டு விட்டார்.

தினேஷ் தான் டார்கெட்: ரச்சிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், ஜோவிகா அவரை ஆம்பளையா என்பது போல பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், படுக்கையில் பூர்ணிமாவும் மாயாவும் ரச்சிதா பற்றியும் தினேஷ் பற்றியும் கொச்சையாக குசுகுசுவென பேசிய காட்சிகளை பதிவிட்டு சனம் ஷெட்டி விளாசி உள்ளார்.

ஆண்களுக்கு பாதுகாப்பில்லை: பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கமல் அந்த காட்டு காட்டினாரே இப்போ ஆண்களுக்கு மாயா மற்றும் பூர்ணிமாவால் பாதுகாப்பில்லை இவர்களை கண்டிப்பாரா? கேட்பாரா கமல்? என சனம் ஷெட்டி ட்வீட் போட்டுள்ளார்.

சனிக்கிழமை ஷூட்டிங்கில் கமல் சார் என்ன பேசப் போகிறார் என்பதையும் தன் மீது உருவான டேமேஜை எப்படி சரி செய்யப் போகிறார் என்பதையும் காண பிக் பாஸே இனி பார்க்க மாட்டேன் என சொன்ன அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X