நாயே.. சேரி.. சொருகிடுவேன்.. அர்ச்சனாவிடம் அசிங்கமாக பேசிய நிக்சன்.. சனம் ஷெட்டி சீற்றம்!
சென்னை: இதே போன்ற வார்த்தையை பிரதீப் ஆண்டனி பேசினார் என்று தான் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டது என்றும் வினுஷா குறித்து நிக்சன் பேசியதை கமல் கண்டுக் கொள்ளாமல் விட்டது போல மீண்டும் அர்ச்சனாவை பார்த்து அசிங்கமாக நிக்சன் பேசியிருப்பதையும் கமல் கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுவாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வரும் முன்னாள் போட்டியாளரான சனம் ஷெட்டி நாயே, சேரி, சொருகிடுவேன்னு நிக்சன் எப்படி பேசலாம் என சீறியுள்ளார்.

படுமோசமான சீசன்: பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த 7வது சீசன் தான் படுமோசமான சீசன் என கடும் விமர்சனங்களை ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் விமர்சகர்களும் வைத்து வருகின்றனர். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய நிலையில், கமல்ஹாசன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் கடுமையான ட்ரோல்களும் குவிந்தன.
அசிங்கமா பேசிய நிக்சன்: சேரி பிஹேவியர் என பேசியதற்கு நடிகை குஷ்பு சமீபத்தில் சிக்கி பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவை பார்த்து நிக்சன் நாயே என்றும் சேரி என்றும் அசிங்கமாகவும் மோசமான வகையிலும் பேசியிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நிக்சன் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் மோசமாக பேசி வருகிறான் என்றும் அவனை முதலில் வெளியே துரத்தி விடுங்க என்றும் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
சொருகிடுவேன்னா என்ன அர்த்தம்?: பெண்களை பார்த்து போட்டுடுவேன், சொருகிடுவேன் என சொல்வது கேவலமான புத்தி என்றும் அதற்கு என்ன அர்த்தம், பிரதீப் ஆண்டனிக்கு எதிராக ரெட் கார்டு தூக்கியது இந்த நிக்சன் தான். விவாதம் நடத்தலாம் வார்த்தைப் போர் நடத்தலாம். ஆனால், நிக்சன் இன்று பேசியது மன்னிக்க முடியாத ஒன்று. இந்த வாரமாவது கமல் சார் வினுஷா பிரச்சனை குறித்து கேள்வி கேட்பாரா? நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாரா? இல்லை இதற்காகத்தான் விஜய் டிவி அவசர அவசரமாக மிக்ஜாம் புயலை காரணம் காட்டி நிக்சனை காப்பாற்றியதா என சனம் ஷெட்டி ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











