நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை!

சென்னை: ப்பா யாருப்பா அந்த எடிட்டர் என பிக் பாஸ் புரமோவை கட் செய்தவரை ரசிகர்கள் தேடிட்டு இருக்காங்க.

சனம் ஷெட்டி போன பிறகு பேசியதை எல்லாம், அவர் இருக்கும் போதே பேசியதாக போட்டு புரமோவை வேற லெவல் வைரலாக்கி விட்டார்.

புரமோ மாதிரியே நிகழ்ச்சியும் இருந்திருந்தா சரவெடியாக இருந்திருக்கும். ஆனால், சனம் ஷெட்டி முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.

சூப்பர் கேம்

சூப்பர் கேம்

இந்த பிக் பாஸ் சீசனில் 16வது நாள் நடத்தப்பட்ட நாடா? காடா? கேம் ரசிகர்கள் ரொம்பவே ரசிக்க வைத்துள்ளது. இப்படியே தினமும் ஒரு டாஸ்க் வச்சாலே ஷோ பிச்சுக்கிட்டு போகும் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள், இன்றைய புரமோவை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் போட்டு வந்தனர். ஷோவும் எந்தவொரு ஏமாற்றமும் இன்றி செம சூப்பராகவே இருந்தது.

நெஞ்சழுத்தக்காரி சனம்

நெஞ்சழுத்தக்காரி சனம்

சரியான கேம் பிளான் உடன் சொர்க்கபுரி அரண்மனையில் இருந்து அரக்கர்கள் கலாயில் இருந்து தன்னால் தப்பிக்க முடியும் என சரியான நெஞ்சழுத்தத்துடன் சனம் ஷெட்டி, இன்றைய போட்டியில் தான் யார் என்பதை நிரூபித்து விட்டார். ரியோ, வேல்முருகன், பாலாஜி, சோம்ஸ் என அத்தனை ஆண்கள் இருக்க இவர் போனதற்காகவே பாராட்டுகள் குவிகின்றன.

ஆம்பளைங்களே இல்லையா?

ஆம்பளைங்களே இல்லையா?

முதல் ஆளாக சனம் ஷெட்டி அரக்கர்கள் இடத்திற்கு வந்த நிலையில், அவரை சூழ்ந்து கொண்ட அரக்கர்களான அர்ச்சனா, அனிதா எல்லாம் சொர்க்கபுரியில் ஒரு ஆம்பளை கூட இல்லையா என ரொம்பவே அடாவடியாக பேசினார். ரியோ, நிஷா எல்லாம் உள்ளே இருந்து கொண்டு அரக்கர்கள் பண்ணும் டார்ச்சருக்கு செம காமெடியாக கமெண்ட்டுகளை கொடுத்து வந்தனர்.

ஜெயித்த சனம்

ஜெயித்த சனம்

உஷாராக கண்களை மூடிக் கொண்டு, அரக்கர்களின் கலாய்க்கு அசைந்து கொடுக்காமல் இறுதி வரை போராடினார். கண்ணை திறந்தவுடன் அவர் அவுட்டாகி விட்டார் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அவர் அசையவே இல்லை. பின்னர் சங்கு ஒலித்து, பிக் பாஸ் சனம் ஜெயித்து விட்டார் என்று சொன்னதும் தனது வெற்றியை அரச குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

பின்னாடி பேசிய அர்ச்சனா

பின்னாடி பேசிய அர்ச்சனா

புரமோவில் பார்த்த அனிதா பேசியது, அர்ச்சனா பேசியது, அந்த பாப்பா ரொம்ப அழுத்தம் என பேசியது எல்லாம், சனம் ஷெட்டி ஜெயித்து உள்ளே போன பிறகு இவங்க பின்னாடி பேசியது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி ஓவராக சனம் ஷெட்டியை டார்கெட் பண்ணி பர்ஸனலா பேசியது அனிதாவுக்கே பிடிக்கவில்லை.

Recommended Video

டுபாக்கூர் Balaji! செய்யும் தொழில் மேல் மரியாதை இல்லை Abhirami Heating Statement
சண்டை இருக்கு

சண்டை இருக்கு

நிச்சயம் இந்த டாஸ்க்கில் சனம் ஷெட்டி பத்தி பின்னாடி அரக்கர்கள் வேஷமிட்ட அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தி பேசியதை வச்சு இந்த வாரத்தில் சண்டை இருக்கும், கமலும் அதை கண்டிப்பா நோட் பண்ணி கண்டிப்பாருன்னு தெரியுது, பார்க்கலாம் இந்த நாடா? காடா? டாஸ்க் யாருக்கெல்லாம் கேடா முடியுதுன்னு..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X