ரொம்ப வல்கரா போறாங்க.. வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்.. பிக் பாஸ் சனம் ஷெட்டி போலீசில் புகார்

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

Recommended Video

Sanam Shetty கொடுத்த புகாரால் கைதான College Student | Cyber Crime Police

தனது வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை மர்ம நபர் ஒருவர் அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார் சனம் ஷெட்டி.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொண்ட சனம் ஷெட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தர்ஷன் காதலி

தர்ஷன் காதலி

பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனுக்கு முன்பே நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் தமிழ் 3ம் சீசனில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என பரபரப்பாக புகார் அளித்திருந்தார்.

பாலாவுடன் மோதல்

பாலாவுடன் மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினாலும், விஜய் டிவி அந்த விவகாரத்தை அப்படியே மூடி மறைத்து விட்டது.

கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

22 படங்களுக்கு மேல் நடித்திருந்தும் தனக்கு இன்னும் சரியான வாய்ப்பு வரவில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி புலம்பிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் பிசியாக வேண்டும் என கிளாமர் போட்டோஷூட்களை எல்லாம் நடத்தி சமூக வலைதளங்களில் ஹாட் போட்டோக்களை அடுக்கி வருகிறார் நடிகை சனம் ஷெட்டி.

ஆபாச மெசேஜ்கள்

ஆபாச மெசேஜ்கள்

நடிகைகளுக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவும் இதே போல ஒரு பிரச்சனையை சந்தித்தார். இந்நிலையில், சனம் ஷெட்டிக்கு தொடர்ந்து வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ்கள் வருவதாக அவர் புகார் அளித்துள்ளார்.

சைபர் கிரைமில் புகார்

சைபர் கிரைமில் புகார்

வாட்ஸ் அப் நம்பர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி உள்ளிட்ட ஆதாரங்களுடன் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் நடிகை சனம் ஷெட்டி அடையாரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அளித்துள்ளார். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X