சிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி!
சென்னை: சுரேஷை சிங்கில் துணி துவைக்கக்கூடாது என்று கூறிய சனம் ஷெட்டி பின்னால் வேறு மாதிரி பேசியது பெரும் பிரச்சனையானது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாள் பேட்ட படத்தில் இடம் பெற்ற எத்தனை சந்தோஷம் பாடலுடன் தொடங்கியது.
தொடர்ந்து முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய துணியை பாத்ரூமில் உள்ள சிங்கில் துவைக்க சென்றார்.

துணி துவைக்காதீர்கள்
அப்போது பாத்ரூம் கிளினிங் டீமின் கேப்டனான சனம் ஷெட்டி, சிங்கில் துணியை துவைக்காதீர்கள் என்றார். அதோடு சரி என்று கூறிக்கொண்டு உள்ளே வந்த சுரேஷ், ஆரியிடம் கொடுத்து தனது துணியை அலசி தர சொன்னார்.

துவைத்தால் என்னவாம்
அந்த நேரத்தில் பாலாஜி உள்ளே வர, உன்னைதான் தேடிக் கொண்டிருந்தேன், என் துணியை அலசி கொடுக்க சொல்லலாம் என்று நடந்த விஷயத்தை கூறினார் சுரேஷ். இதில் என்ன இருக்கிறது, சிங்கில் துவைத்தால் என்னவாம். இது வேண்டுமென்றே செய்வது போன்று உள்ளது என்று கூறியப்படி கேப்டனான ரியோவிடம் விஷயத்தை சொல்லி அனுமதி கேட்டார் பாலாஜி.

பாத்ரூம் கழுவ முடியுது
அதற்கு ரியோ அனுமதி கொடுத்தார். இருந்த போதும் சனமிடம் அதுகுறித்து விசாரித்தார். அப்போது துணி அலச முடியவில்லை, பாத்ரூம் மட்டும் கழுவ முடியுமா என கேட்டார். இது எங்கேயோ இடிக்குதே என்று தேவையில்லாததை பேசினார்.

சனமை வெளுத்த கேபி
அப்போது அங்கிருந்த கேபி, துணி துவைப்பது அவருடைய பர்சனல் அதைப்பற்றி பேசாதீர்கள் என்றார். மேலும் சனம் ஷெட்டியிடம், அவருடைய பர்சனலில் ஏன் தலையிடுகிறீர்கள், அவர் துணி துவைப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை, பாத்ரூம் கழுவுவது அவருடைய இஷ்டம் என்று கூறினார்.

கணக்கு புரியவில்லை
அதனைக் கேட்ட சனம் ஷெட்டி நீ எனக்கு அட்வைஸ் செய்யாதே, எனக்கு தெரியும், உனக்குதான் கணக்கு புரியவில்லை என கேபியிடம் எகிறினார். இதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் பாலாஜி ஆகியோரிடம் கேபி நடந்த விஷயத்தை கூறினார்.

டென்ஷனான சனம்
இதனைக் கேட்ட சுரேஷ், இதெல்லாம் நக்கல்தானே, இதுதேவையில்லாததுதானே என டென்ஷன் ஆகிவிட்டார். முன்னடதாக நாம் ஃபிரண்ட்ஸ் என்று கூறிவிட்டு பின்னால் பாத்ரூம் கழுவ முடியும் துணி துவைக்க முடியலையா என்று கேட்டது சுரேஷை கோபப்படுத்திவிட்டது.


Click it and Unblock the Notifications